2023ம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி தற்போது 200 மில்லியன் முஸ்லிம்கள் முழு உலகிலும் சிதறி வாழ்கின்றனர். இது உலக சனத்தொகையில் 25% ஆகும்.
முஸ்லிம் சனத்தொகையின் வேகமான வளர்ச்சியால் எதிர்வரும் 2050ம் ஆண்டாகும்போது உலகில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சனத்தொகை சமனிலையை அடையும் என்றும், 2100ம் ஆண்டில் உலக மொத்த சனத்தொகையில் கிறிஸ்தவர்களை விடவும் முஸ்லிம்கள் ஒரு சதவீதத்தால் அதிகமாக இருப்பார்கள் என்றும் பியூ ஆராய்ச்சி மையத்தின் பிந்திய ஆய்வொன்று கூறுகிறது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம், மதங்கள் குறித்த ஆய்வு அறிக்கையிலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி உலக சனத்தொகையில் 2050ம் ஆண்டில் ஹிந்துக்கள் 14.9 வீதத்தில் மூன்றாவது இடத்திலும், எந்த மதத்தையும் பின்பற்றாதோர் 13.2 வீதத்தில் நான்காம் இடத்திலும் இருப்பார்கள் என்றும் குறிப்பிடப் படுகின்றது.
அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட நாடு
உலகில் அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட நாடாக 2050ம் ஆண்டில் இந்தியா மாறிவிடும் என்று அந்த ஆய்வு மேலும் குறிப்பிடுகிறது.
தற்போது உலகில் அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட நாடாக இந்தோனேஷியா காணப்படுகிறது.
இந்தோனேசியவில் 21 கோடி முஸ்லிம்களும், இரண்டாவதாக பாகிஸ்தானில் 17. 8 கோடி முஸ்லிம்களும், மூன்றாவதாக இந்தியாவில் 17.6 கோடி முஸ்லிம்களும், பங்களாதேஷில் 14 கோடி முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.
முஸ்லிம் உலக எழுச்சியில் இந்திய முஸ்லிம்களது பங்களிப்பு மகத்தானதாகும். அத்துடன், முஸ்லிம் உலகிற்கு எதிரான சதிகளை முறியடிப்பதிலும், முஸ்லிம் உலகின் ஒருமைப்பாட்டிலும் இந்தியத் துணைக் கண்ட முஸ்லிம்களது பங்களிப்பு கேந்திர முக்கியத்துவமானதாகும்!
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011ம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின்படி, இந்து மக்கள் தொகை சதவீதம் குறைந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121.09 கோடியாக உள்ளதாக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், இந்துக்கள் 96.63 கோடி பேர் உள்ளனர், முஸ்லிம்கள் 17.22 கோடி பேரும், கிறிஸ்தவர்கள் 2.78 கோடி பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகையானது 0.8 சதவீத அதிகரிப்பால், 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்துகளின் எண்ணிக்கையானது 0.7 குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து மதத்தை சேர்ந்தவர்களின் மக்கள் தொகை தற்போது 96.63 கோடியாக உள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 79.8 சதவீதம் ஆகும். முஸ்லிம்கள் 17.22 கோடியாகும். இது மொத்த சனத்தொகையில் 14.2 சதவீதமாகும்.
சுமார் 31 கோடி முஸ்லிம்கள் அதாவது 20% முஸ்லிம்கள், இஸ்லாம் சிறுப்பான்மை மதமாக காணப்படும் நாடுகளில் வாழ்கின்றனர். ஆனாலும் பல கட்டங்களில் இந்த சிறுபான்மை நாடுகளின் முஸ்லிம் எண்ணிக்கை முஸ்லிம் நாடுகளின் முஸ்லிம் எண்ணிக்கையைவிட அதிகமானது.
2023ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாக உள்ள நிலையில், சீனாவின் மக்கள் தொகை 142.56 கோடியாகும்!
இதன்படி, சீனாவை விட இந்தியாவில் 30 லட்சம் பேர் அதிகம் வாழ்கின்றனர். அதனால் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்திற்கு வந்துள்ளமை பற்றி எமது முன்னைய கட்டுரையொன்றில் பிரஸ்தாபிக்கப்பட்டதை "வேட்டை" வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம்!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments