Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் தெற்காசியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம்

தெற்காசியாவின் முதலாவது விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான பணிகளை விரைவுபடுத்துவதற்கு இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்ததுள்ளது.

டயகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை அபிவிருத்தி செய்து விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

"இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இந்த நாட்டின் இளைஞர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கு அவர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களுக்கு உயர்த்துவதற்காக பரந்த அளவிலான பணிகளைச் செய்து வருகிறது" என்று மேலும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


 



Post a Comment

0 Comments