Ticker

6/recent/ticker-posts

124 பந்துகளில் 182 ரன்கள் குவித்த ஸ்டோக்ஸ்.. இங்கிலாந்து கிரிக்கெட்டில் புதிய சாதனை


லண்டன் : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.  

நான்கு ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்ற நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் லண்டன் ஓவல் மைதானத்தில் பல பரீட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜானி பாரிஸ்டோ, டக் அவுட் ஆகியும் ஜோ ரூட் 4 ரன்கள் வெளியேறினார். இதன் அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு டேவிட் மாலனுடன் பென்ஸ் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை கதகளி ஆடினார்.

ஒருநாள் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்று பின்னர் உலகக் கோப்பைக் காக திரும்பிய பென் ஸ்டோக்ஸ் கடந்த இரண்டு போட்டிகளிலும் 52 ,1 ஆகிய ரன்களை அடித்து இருந்தார். இந்த நிலையில் தாம் எதற்காக திரும்பி வந்தேன் என்பதை ரசிகர்களுக்கு காட்டும் விதமாக நடப்பாண்டில் பிளாக்பஸ்டர் இன்னிங்ஸ் ஒன்றை பென் ஸ்டோக்ஸ் ஆடினார். தாம் எவ்வளவு நாள் கழித்து வந்தாலும் இங்கிலாந்தின் அதிரடி வீரர் என்ற சிம்மாசனம் தமக்கு தான் என்பதை இன்று இன்னிங்ஸ் மூலம் நிரூபித்தார். நியூஸிலாந்து வீசிய பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கத்திலும் சிக்ஸர்களாக பென் ஸ்டோக்ஸ் பறக்க விட்டார். 44 பந்துகளில் முதலில் அரைசதம் கடந்த பென் ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் எல்லாம் சதம் விளாசினார்.அத்துடன் பென் ஸ்டோக்ஸ் நிறுத்திக் கொள்ளாமல் அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்பதற்காக சிக்ஸர்களை பறக்க விட்டார்.
16 பந்துகளை எல்லாம் பென் ஸ்டோக்ஸ் 150 ரன்கள் கடக்க இன்னும் பத்து ஓவர்கள் எஞ்சி இருந்ததால் இரட்டை சதத்தை பென் ஸ்டோக்ஸ் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அணியின் ஸ்கோர் தான் முக்கியம் என்பதற்காக தொடர்ந்து அதிரடி காட்டிய பென் ஸ்டோக்ஸ், 124 பந்துகளை எதிர்கொண்டு 182 ரன்கள் விளாசிய நிலையில் மிஸ்டர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். பென் ஸ்டோக்ஸ் இன் இந்த இன்னிங்ஸில் 9 இமாலய சிக்ஸர்களும் 15 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் என்று பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றார். மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் நான்காவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரன் என்ற பெருமையும் பென் ஸ்டோக்ஸ் பெற்றார். மறுமுனையில் டேவிட் மாலன் 96 ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 368 ரன்களில் ஆட்டம் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் பவுல்ட் 50 ரன்கள் விட்டு கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Source:mykhel


 



Post a Comment

0 Comments