குறள் 1010
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
மருமவன.. நல்ல மனசு இருக்க பரம்பரை பணக்காரங்களுக்கு கொஞ்ச காலத்துக்கு வறுமை வந்தாக்கூட, அது எப்பிடி இருக்குந் தெரியுமா? மேகம் இல்லாட்டா மழை பெய்யாதுல்லா.. அது மாதிரி யாருக்கும் பலன் இல்லாம இருக்கும்.
குறள் 1012
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
மாப்ள.. திய்ங்கதுக்கு சாப்பாடு, உடுத்துததுக்கு துணிமணி, இன்னும் கொஞ்சம் வசதிகள்.. இதுல்லாம் எல்லோருக்கும் பொதுவான தேவைகள் தான். இருந்தாலும் ஒருத்தங்கிட்ட இருக்க வேண்டிய முக்கிய குணம், கெட்ட பழக்க வழக்கங்களுக்கு வெக்கப்பட்டு ஒதுங்கியிருப்பது தான் மாப்ள..
குறள் 1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
மாப்ள... ஒருத்தன் அவன் மேல பழி விழுந்தாலும் கூச்சப் படுவான். பிறத்தியார் மேல பழி வந்தா, அதுக்கும் வெக்கப் படுவான். இப்பிடிப்பட்டனை நாணம் வாழும் இடம்னு இந்த ஒலகமே பெருமையா சொல்லும் மாப்ள.
குறள் 1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
தம்பி... கொள்கை கோட்பாடெல்லாம் மறந்து ஒருத்தன் தப்பு செஞ்சாக்கா, அது அவனோடகுடும்ப பெருமையை ஓச்சுரும்.
செஞ்ச தப்புக்கு வெக்கப்படுத பண்பு இல்லாட்டா அவனுக்கு இருக்க எல்லா நல்ல பேரும் கெட்டுப் பொயிரும் தம்பி.
குறள் 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
கடமைகளை செய்யதுக்கு எப்பமும் நான் சோம்பல் படமாட்டேன் ன்னு சொல்லி செய்ய வேண்டிய சோலியை செய்யதுக்காக விடா முயற்சியோட ஒருத்தன் இருக்காமுன்னா அது பெருமைப்பட வேண்டிய ஒண்ணு மருமவன. அந்த பெருமையை விட ஒசத்தியான பெருமை வேற எதும் இல்லவே இல்லை.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments