விண்ணதனைத் தொட்டெழுந்து
வெண்ணிலவில் கால் பதித்த
விஞ்ஞானத் திமிர்கண்டும்
வேற்றுமைகள் பல கொண்டும்
இனங்களெனப் பிரிவுண்டு
வாழுகின்ற வாழ்வதனை
வெறுத்திட்ட பூமாதா தன்
பொறுமைக்கு எல்லையிட்டு,
பூலோக மைந்தரிடை
பரப்பிவைத்த நுண்ணுயிரை
பாரினிலே இனி வேண்டாம்
எனக்கரங்கள் ஏந்திடுவோம்!
உயர்வானைத் தொடுமலையில்
வந்துலவும் மேகமதில்
காணுகின்ற வண்ணமெலாம்
வடிக்கின்ற கவிதைகளைப்
புறந்தள்ளி நகரவைத்து
வஞ்சமது கொண்டுலவும்
நெஞ்சங்களை இனங்கண்டு
கனிவோடு கற்பித்து
வாஞ்சையுடன் கவியார்த்து
வீட்டுக்குக்கும் நாட்டுக்கும்
வாழ்கின்ற வையத்திற்கும்
நல்லவர்களாய் வல்லவர்களாய்
அச்சாணியாய் ஆக்குகின்ற
அருங்கவிகள் ஆக்கிடுவோம்
“வேட்டை”யென்ற மின்னிதழில்
வேகமதாய்ப் போட்டிடுவோம்!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
1 Comments
நுண்ணுயிர் வேண்டாமென இரு கரமும் ஏந்திடுவோம்!
ReplyDeleteசெம்மைத்துளியான் அவர்களதுகவிதை அருமை