வாகனத்தில் சிரோமியும், செரோக்கியும் ஏறிவிட்ட நிலையில், யோகியார் ஏறிக்கொள்ள மறுத்தது இர்வினுக்குக் கவலை தந்தது!
"மிதி வண்டியை இப்படியே விட்டு விட்டுச் சென்றால், யாராவது எடுத்துச் சென்றுவிடலாம்; யார் வண்டியோ யான் அறியேன். இருந்த இடத்தில் கொண்டு சேர்க்காவிட்டால், வண்டியின் உரித்தாளிக்கு யான் கடன் பட்டவனாகி விடுவேன்!" என்று வண்டியின் சொந்தக்காரன் தான்தான் என்பதை அறியாமல் யோகியார் குறிப்பிட்டதும், காருக்குள் ஏறியிருந்த செரோக்கி மெலிதாகச் சிரித்துக் கொண்டான்!
"சரி பெரியவரே! வண்டி அப்படியே இருக்கட்டும். எவரும் எடுத்துச் செல்ல மாட்டார்கள். நாம போஷணம் உண்டுவிட்டு வந்து அதனை எடுத்துக் கொள்ளலாம்" என்று இர்வின் யோகியாருக்கு நம்பிக்கை ஊட்டியபோதிலும், அவர் அதற்கு இணங்கவில்லை!
"சரி குழந்தாய், அதோ தெரிகிறதே இரட்டைத் தூண்கள். அந்த இடத்திற்கு உனது வாகனத்தை எடுத்துக் கொண்டு முதலில் நீ அங்கே போ! யான் அங்கு வந்து எனது வண்டியைப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு உனது வாகனத்திற்குள் ஏறிக் கொள்கிறேன்" என்று யோகியார் கூறியதும், செரோக்கியும் சிரோமியும் காரின் கதவுகளை மூடிக்கொண்டதும், கார் நகர்ந்தது!
மிதிவண்டியில் ஏறிய யோகியார் அதனை மெல்ல நகர்த்தி காரைப் பின் தொடர்ந்தார்!
இர்வின் காரை இரட்டைத் தூண்கள் வரைக்கும் கொண்டு சென்று நிறுத்தியதும், தொடர்ந்துவந்த யோகியார் அருகிலிருந்த மிதிவண்டி திருத்தினரிடம் தனது வண்டியை ஒப்படைத்துவிட்டு, காருக்குள் ஏறிக்கொண்டார்.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments