ஹாங்சோ : 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் டி20 கிரிக்கெட் தொடரில் நேபாளம் - மங்கோலியா இடையே ஆன போட்டி வரலாற்றில் இடம் பிடித்தது
மங்கோலியா இந்தப் போட்டியில் 273 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மிகப் பெரிய டி20 தோல்வியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் பல்வேறு முக்கிய டி20 கிரிக்கெட் சாதனைகளை உடைத்து எறிந்தது நேபாள அணி. மங்கோலிய வீரர்களுக்கு அதிக கிரிக்கெட் அனுபவம் இல்லாததை பயன்படுத்தி நேபாள அணி ஈவு இரக்கமே இல்லாமல் அடித்து துவைத்தது.
இந்தப் போட்டியில் மங்கோலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நேபாள அணியின் துவக்க வீரர்கள் குஷால் மற்றும் ஆசிப் ஷேக் பெரிய அணியுடன் ஆடுவது போல தட்டுத் தடுமாறி ரன் சேர்த்து குஷால் 19 ரன்களிலும், ஆசிப் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களின் ஸ்ட்ரைக் ரேட் நூறுக்கும் கீழ் இருந்தது.
ஆனால், அடுத்து வந்த குஷால் மல்லா 50 பந்துகளில் 137 ரன்களும், ரோஹித் பௌடல் 27 பந்துகளில் 61 ரன்களும் குவித்தனர். தீபேந்திரா சிங் 9 பந்துகளில் அரைசதம் கடந்து சர்வதேச கிரிக்கெட்டில் இது வரை இருந்த அனைத்து அதிவேக அரைசதம் அடித்த சாதனைகளையும் உடைத்து முதல் இடத்தை பிடித்தார்.
நேபாள அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களை எட்டியது. மங்கோலிய வீரர்களின் பந்துவீச்சு பரிதாபமாக இருந்தது. டேர்பிஷ் என்ற வீரர் ஒரு ஓவர் வீசி 27 ரன்கள் கொடுத்தார். முன்குன் என்ற வீரர் 2 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்தார். லுட்பாயர் என்ற பந்துவீச்சாளர் மட்டுமே 4 ஓவருக்கு 38 ரன்கள் கொடுத்து ஓவருக்கு 10 ரன்களுக்கும் கீழ் கொடுத்து இருந்தார். மற்றவர்கள் ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் தான் கொடுத்து இருந்தனர்.
அடுத்து பேட்டிங் டிய நேபாளம் 41 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 273 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் நேபாளம் செய்த சாதனைகள் - அதிவேக சதம் - குஷால் மல்லா - 34 பந்துகள்
அதிவேக அரைசதம் - திபேந்திரா சிங் - 9 பந்துகள் (யுவராஜ் சிங்கின் 16 ஆண்டு அதிவேக அரைசத சாதனையை முறியடித்தார் திபேந்திரா) டி20 போட்டியில் அதிக ரன்கள் - நேபாளம் 314 ரன்கள் டி20 போட்டியில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி - நேபாளம் 273 ரன்கள் டி20 போட்டியில் 300 ரன்களை கடந்த முதல் அணி - நேபாளம் (முந்தைய அதிகபட்ச ரன்கள் சாதனை 278 ரன்கள்).
Source:mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments