ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது.
இந்த குடும்பத்துக்கும் அங்கு இருந்த மற்றொரு தரப்புக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த குடுமபத்தினரை அந்த கிராமத்தில் இருந்து வெளியேறுமாறு அந்த மற்றொரு தரப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை அந்த குடும்பம் இருந்த வீட்டுக்குள் துப்பாக்கி மற்றும் கத்தியோடு, 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து நுழைந்துள்ளது. பின்னர் அங்கிருந்த குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை வெளியே இழுத்துச்சென்று கயிற்றால் அவர்களை கட்டியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த 24, 25 மற்றும் 35 வயதுடைய 3 பெண்களை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளது. அதிகாலை வரை இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அந்த கும்பல், பின்னர் அந்த வீட்டில் இருந்த பணம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது
இதனிடையே அந்த கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த கும்பல் அங்கிருந்து சென்றதும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கிராம தலைவரிடம் இதுகுறித்து தெரிவிக்க உடனே காவல்துறையில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்த குடும்பத்தை மிரட்டிய அந்த எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
Source:kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments