Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

6 மாத வெயிட்டிங் ஓவர்.. ஐசிசி பட்டியலில் முதலிடத்தைத் தட்டித் தூக்கிய முகமது சிராஜ்!


அண்மையில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில், கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது இந்திய கிரிக்கெட் அணி. 

 
இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இந்தியா, இலங்கையை சுலபமாக வீழ்த்தி சாம்பியன் ஆனது.  இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், இலங்கை அணியின் விக்கெட்டுகளை சீட்டுக் கட்டு போல சரித்தார்.

இதனால் இலங்கை அணி 50 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஒரே ஓவரில் 4 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்த சிராஜ், ஒட்டுமொத்தமாக 6 பேரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் 7 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதே ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அவரது சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான  தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், ஆசிய கோப்பை ஃபைனலில் கலக்கிய சிராஜ், 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததன் மூலம் 8 இடங்கள் முன்னேறி தற்போது இந்த முதல் இடத்தை அவர் பிடித்திருக்கிறார்.

அந்த வகையில் 694 ரேட்டிங் பாயிண்டுகளுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். ஜோஸ் ஹாசில்வுட், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் முறையே 2, 3ஆவது இடங்களில் உள்ளனர். இந்திய வீரர் குல்தீப் யாதவ் 9ஆவது இடத்தில் உள்ளார்.

ஆசிய கோப்பையில் பேட்டிங்கில் அசத்திய ஷுப்மன் கில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி, ரோகித் சர்மா முறையே 8, 10 ஆகிய இடங்களில் உள்ளனர். பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

Source:news18


 



Post a Comment

0 Comments