சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெல்லம் சாப்பிடலாமா: சர்க்கரை நோய் என்பது மிகவும் ஆபத்தான நோயாகும். இதை மருந்துகளால் முற்றிலும் ஒழிக்க முடியாது.
ஆகையால் நீரிழிவு நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். இவர்கள் உணவில் பல விஷயங்களை தவிர்க்கவும் வேண்டும். எந்தெந்த பொருட்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அதிகரிக்கும், எதைச் சாப்பிட்டால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை சர்க்கரை நோயாளிகள் மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.
வெல்லம்
வெல்லத்தைப் பொறுத்தவரை, அது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால், சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா கூடாதா என்ற குழப்பம் சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி இருக்கும். வெல்லம் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரிக்குமா? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வெல்லத்தில் இருக்கும் சத்துக்கள் என்ன?
வெல்லம் சர்க்கரைக்கு நல்ல மற்றும் ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் நல்ல அளவில் காணப்படுகின்றன. ஆர்கானிக் வெல்லம் ரசாயனம் இல்லாதது. அதனால்தான் வெல்லம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெல்லம் சாப்பிடலாமா கூடாதா?
செயற்கை இனிப்புகளுக்கு பதிலாக இயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இயற்கை இனிப்பு ஒரு சிறந்த வழி என்று இதற்கு அர்த்தமல்ல. கரிமப் பொருட்களால் செய்யப்பட்ட வெல்லம் வெள்ளை சர்க்கரையை விட சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அது பதப்படுத்தப்பட்டு கடாயில் தயாரிக்கப்படுகிறது. ஆர்கானிக் வெல்லத்தில் ரசாயனம் மற்றும் இதர பொருட்கள் கலக்கப்படுவதில்லை. இருப்பினும், வெல்லத்தை குறைந்த அளவில் உட்கொள்ளும் போது மட்டுமே அது நன்மை பயக்கும்.
சர்க்கரை நோயாளிகள் ஏன் வெல்லம் சாப்பிடக்கூடாது?
100 கிராம் வெல்லத்தில் 98 கிராம் கார்போஹைட்ரேட்டும், அதே அளவு சர்க்கரையில் 100 கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளன. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் 2 கிராம் கார்போஹைட்ரேட் மட்டுமே. நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிட வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துவதற்கு இதுவே காரணம்.
வெல்லம்-சர்க்கரை-க்கு பதிலாக சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிடலாம்?
சர்க்கரை நோயாளிகளின் உணவு முறை குறித்து, ஊட்டச்சத்து நிபுணர்கள், இனிப்பான உணவின் மீதான ஆசை எப்போதாவது அதிகரித்தால், அதாவது இனிப்பு உணவின் மீது நாட்டம் அதிகரித்தால், மூலிகைப் பொருட்களையே சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இஞ்சி, துளசி, இலவங்கப்பட்டை போன்றவற்றின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு. ஆகையால் நீரிழிவு நோயாளிகள் அவற்றை உட்கொள்ளலாம்.
வெல்லத்தின் பிற பக்க விளைவுகள்
- எடையை குறைக்க நினைப்பவர்கள். தாங்கள் உட்கொள்ளும் வெல்லத்தின் அளவைக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் அது எடை அதிகரிக்க வழிவகுக்கும். வெறும் 10 கிராம் வெல்லத்தில் 40 கலோரிகள் உள்ளன.
- ஆயுர்வேதத்தின்படி, வயிற்று உப்புசம் உள்ளவர்கள் வெல்லத்தைத் தவிர்க்க வேண்டும். ஆய்வுகளின்படி, சர்க்கரையின் அளவு உப்பசத்தை அதிகரிக்கும்.
- அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி உள்ளவர்கள் வெல்லத்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது தேவையற்ற குடல் நுண்ணுயிரிகளை குடலுக்குள் அனுமதித்து அதன் மூலம் சிக்கலை மோசமாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
Source:zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments