Colombo (News 1st) மட்டக்களப்பு - புனானையில் Batticaloa Campus என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர் கல்வி நிறுவனம் மீளவும் M.L.A.M.ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கல்வி நிறுவனம் இன்று தன்னிடம் கையளிக்கப்பட்டதாக M.L.A.M.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லாவின் கண்காணிப்பின் கீழ் Batticaloa Campus உயர் கல்வி நிறுவனத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இந்த உயர் கல்வி நிறுவனம் தொடர்பில் சர்ச்சை உருவாகியிருந்தது.
பின்னர் குறித்த கட்டடத்தை அரசு பொறுப்பேற்றது.
இதன் பின்னர், கொரோனா காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, Batticaloa Campus உயர் கல்வி நிறுவனம் படையினரால் இன்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கல்வி நிறுவனம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.
Source:newsfirst
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments