Ticker

6/recent/ticker-posts

வெள்ளத்தில் மாண்டோரை மொத்தமாக அடக்கம் செய்ய வேண்டாம் - லிப்யாவுக்கு WHO ஆலோசனை


லிப்யாவில் வெள்ளத்தில் மாண்டோரை முறையாக அடக்கம் செய்யும்படி உலகச் சுகாதார நிறுவனம், அந்நாட்டு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 
ஒரே புதைக்குழிக்குள் நிறைய சடலங்களைப் புதைக்க வேண்டாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

அவ்வாறு செய்தால், அது மாண்டவர்களின் அன்புக்குரியவர்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கலாம்; சமூக, சட்டரீதியான சிக்கல்களும் ஏற்படலாம் என்று நிறுவனம் கூறியது. இதனால் சுகாதாரப் பிரச்சினைகளும் வரக்கூடும் என்று நிறுவனம் எச்சரித்தது.

லிப்யாவில் 6 நாள்களுக்குமுன்னர் 2 அணைக்கட்டுகள் உடைந்து பெருவெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் மாண்டவர்களில் 1,000க்கும் அதிகமானோர் பெரும் புதைக்குழிகளில் புதைக்கப்பட்டுள்ளனர்.

10,000 பேரை இன்னமும் காணவில்லை. மாண்டோர் எண்ணிக்கை 11,000ஐத் தாண்டியது.

டாரெனா (Darena) நகரில் ஆயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் சொன்னது.

மாண்டோரின் விவரங்களை முறையாகப் பதிவுசெய்யும்படி உதவிக் குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

பல சடலங்கள் முறையாக அடையாளம் காணப்படாமல் அடக்கம் செய்யப்பட்டதாக அங்குள்ளோர் கூறுகின்றனர்.

இடிபாடுகளுக்கு இடையே இன்னமும் தேடல் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

Source:seithi


 



Post a Comment

0 Comments