கிரீஸுக்குத் தேன்நிலவுக்குச் சென்றிருந்த புதுமணத் தம்பதி வெள்ளத்தில் மாண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த அவர்கள் இருந்த வீடு வெள்ளத்தில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் சொன்னது.
அந்தச் சம்பவம் இம்மாதம் 6ஆம் தேதி பொடிஸ்டிகா (Potistika) உல்லாசத்தலத்தில் நேர்ந்தது.
அப்போது கிரீஸ் டேனியல் (Daniel) புயலால் பாதிக்கப்பட்டிருந்தது.
கனத்த மழை பெய்ததால் தம்பதி தேன்நிலவுக்காக வாடகைக்கு எடுத்திருந்த பங்களா வீட்டிலேயே இருக்க முடிவெடுத்ததாக வீட்டின் உரிமையாளர் BBC-யிடம் கூறினார்.
அவரும் மற்ற விருந்தாளிகளும் உயரமான பகுதிக்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
தம்பதியை அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்தியதாக உரிமையாளர் சொன்னார்.
மரபணுச் சோதனைகள் மூலம் அவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரியாவின் வெளியுறவு அமைச்சு கூறியது.
அவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சு அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது.
Source:seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments