Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

மனைவியை விவாகரத்து செய்யும் கூகுள் இணை நிறுவனர்.. எலான் மஸ்க்தான் காரணமா? பரவும் தகவல்!


கூகுள் இணை நிறுவனரான செர்ஜி பிரின் தனது மனைவி நிகோல் ஷானஹாசிடம்  இருந்து விவாகரத்து பெற உள்ளார் . இதற்கு தனது மனைவி எலான் மஸ்குடன் தொடர்பில் இருந்ததே காரணம் என்று செர்ஜி பிரின் குற்றம் சாட்டியுள்ளார். 

 
இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

வழக்கு விசாரணையின் போது நிகோல் ஷானஹான் தான் விவாகரத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும் விவாகரத்துக்கு பின்னர் செய்ய வேண்டிய ஆதரவை செர்ஜி பிரின் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் 9ஆவது மிகப்பெரும் பணக்காரராக 50 வயதாகும் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் இருந்து வருகிறார். இவருக்கு 118 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவரும் பிரபல வழக்கறிஞரான நிக்கோல் ஷானஹானும் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்து வந்தனர்.  அதே ஆண்டில் தனது முதல் மனைவி அன்னி வோஜ்சிஸ்கியை விவாகரத்து செய்தார். இதையடுத்து 2018 இல் நிகோல் ஷானஹானுக்கும் செஞ்சி பிரின்னுக்கும் இடையே திருமணம் நடந்தது. 2021 ஆம் ஆண்டிலிருந்து இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதற்கு தனது மனைவி நிக்கோல் ஷானஹான் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்குடன் தொடர்பு இருந்ததே காரணம் என்று செர்ஜி பிரின் குற்றம் சாட்டி உள்ளார்.

இதனை ஷானஹான் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர்  மறுத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி எலான் மாஸ்க் தனது சமூக வலைதள பக்கத்தில், சர்ஜியும்  நானும் நண்பர்கள். நானும் அவரும் விருந்தில் பங்கேற்று இருக்கிறோம் . அவரது மனைவி நிகோலை 3 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே பார்த்துள்ளேன். அதுவும் அவர் பலருடன் இருக்கும்போது பார்த்திருக்கிறேன். அவருக்கும் எனக்கும் இடையே ரொமான்டிக்காக எதுவும் நடக்கவே இல்லை. என்று கூறியிருந்தார்.

இருப்பினும் நிக்கோல் ஷாநஹான் மற்றும் எலான் மஸ்க் இடையே தொடர்பு இருப்பதாக பிரபல இதழான வால் ஸ்ட்ரீட் ஜேனல் தனது தகவலில் உறுதியாக உள்ளது.

Source:news18


 



Post a Comment

0 Comments