கோர்ட்டுக்கே டிமிக்கி கொடுத்த போலி வக்கீல்.. ஆனா அவர் வாதாடி ஜெயித்த கேஸ் 26ம் - குழம்பி நிற்கும் அதிகாரிகள்!

கோர்ட்டுக்கே டிமிக்கி கொடுத்த போலி வக்கீல்.. ஆனா அவர் வாதாடி ஜெயித்த கேஸ் 26ம் - குழம்பி நிற்கும் அதிகாரிகள்!


நைஜீரிய ஊடகங்கள் அளித்துள்ள தகவலின்படி, அந்த போலி வழக்கறிஞர், அந்த 26 வழக்குகளையும் மாஜிஸ்திரேட்டுகள், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வாதிட்டு வென்றுள்ளார் என்று ஆச்சர்யப்படவைக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது தான் பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 
Mweda என்ற அந்த நபர், தன்னை ஒரு தகுதி வாய்ந்த வழக்கறிஞராக சில காலத்திற்கு சித்தரிக்க முடிந்தது தான் பலருக்கு ஆச்சர்யமாக உள்ளது. வெளியான அறிக்கையின்படி, நீதிபதிகள் யாருமே அவர் கைதாகும் வரும், அவர் மீது சிறிதளவு கூட சந்தேகப்படவில்லை என்று கூறப்படுகிறது. கென்யாவின் லா சொசைட்டியின் நைரோபி கிளையின் ரேபிட் ஆக்ஷன் டீம், பல பொதுப் புகார்களைப் பெற்ற பிறகு, அவரை கைது செய்துள்ளது. 

கென்யாவின் Law Society நைரோபி கிளையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், "BRIAN MWENDA NJAGI என்ற அந்த நபர், கென்யாவின் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் அல்ல என்பதை சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்க இந்த கிளை விரும்புகிறது. சொசைட்டியில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினரும் அவர் இல்லை" என்று தெரிவித்துள்ளது.

கென்யாவின் சட்டச் சங்கம், Mweda, தங்கள் போர்ட்டலை கிரிமினல் முறையில் அணுகி, "அவரது பெயருடன் தொடர்புடைய ஒரு கணக்கை அடையாளம் கண்டு, அதில் இருந்த விவரங்களைத் திருத்தி, கென்யாவின் சட்டத் தொழிலில் ஊடுருவும் முயற்சியில் தனது சொந்த புகைப்படத்தைப் பதிவேற்றி" இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.

நடைபெற்ற ஒரு அவசர கூட்டத்தில், பிரையன் ம்வெண்டா என்ட்விகா என்ற அரசு அங்கீகாரம் பெற்ற வழக்கறிஞர் தனது இணைய பகுதியில் லாக் இன் செய்யமுடியாமல் போனபோது, அது குறித்து உரிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது தான் "பிரையன் ம்வெண்டா" என்ற தனது பெயரை போல மற்றொரு பெயர் கொண்ட நபர் பலரை ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

Source:asianetnews


 



Post a Comment

Previous Post Next Post