இந்தியர்கள் இந்தியா மட்டும் இல்லாமல் பல உலக நாடுகளின் பெரிய நிறுவனங்கள், அரசு பணிகள், நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளில் இருக்கின்றனர். அவர்களுக்கான மதிப்பும் மரியாதையும் உலக அளவுகளில் பேசப்படுகின்றன. அப்படி வெளி நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள், மற்றும் இந்திய வம்சாவளிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் என்று யோசித்ததுண்டா?
இப்போது அதற்கான விடையையும் அவர் பற்றிய கதைகளையும் அவரது உலக மதிப்பையும் தான் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். வெளி நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள், மற்றும் இந்திய வம்சாவளிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் ஒரு தமிழர் என்று சொன்னால் நம்புவீர்களா? உண்மை தான் உலகின் தலைசிறந்த தேடுபொறியாக இருக்கும் கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சைதான் அந்த பெருமைக்கு உரியவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் உலகின் பணக்கார நிர்வாகிகளில் ஒருவராக திகழ்கிறார். 1 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் சந்தை இருப்பை கொண்ட ஒரு நிறுவனத்தை அவர் வழிநடத்துகிறார் என்றால் தனி கெத்து தானே! அவர் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி.
சுந்தர் பிச்சை மதுரையில் பிறந்தவர். அவரது தாயார் லட்சுமி ஒரு ஸ்டெனோகிராபர் . இவருடைய தந்தை ரெகுநாத பிச்சை ஒரு மின் பொறியாளர். மதுரையில் பள்ளி படித்த இவர், ஐஐடி காரக்பூரில் உலோகவியலில் பொறியியல் படித்தார். அவர் தனது படிப்பில் கவனமாக இருந்து பாடங்களில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியலில் எம்.எஸ். பின்னர் வார்டன் பள்ளியில் எம்பிஏ படித்தார்.
2004 ஆம் ஆண்டு கூகுளில் தயாரிப்பு மேலாளராக சேர்ந்தார். கூகுள் குரோம் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். 2008 இல், அவர் துணைத் தலைவர் பதவிக்கு மாற்றப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரானார். 2014 இல், அவர் தயாரிப்பு தலைவரானார். பின்னர், 2015 இல் Google இன் CEO ஆனார்.
அது மட்டும் இல்லாமல் 2019 இல், கூகுள் நிறுவனத்தில் தாய் நிறுவனமான Alphabet Inc இன் CEO ஆனார். கல்லூரி படிக்கும் போது அஞ்சலியை சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவள் கோட்டாவைச் சேர்ந்தவர். ஐஐடி காரக்பூரில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிக்கும்போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
பிச்சை தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கு முன்பு, பல நிறுவனங்கள் அவரை தங்கள் நிறுவங்கங்களுக்கு ஈர்க்க விரும்பின. இருப்பினும் கூகுளில் இருந்து விலக வேண்டாம் என அவரது மனைவி கேட்டுக் கொண்டாராம். அதனால் தான் இப்பொது இந்த நிலையில் இருக்கிறார். மேலும் அவரை பற்றி பார்த்தால், அவர் ஒரு கிரிக்கெட் விரும்பி.
இவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு என்று பார்க்கும்போது, 2022ல் சுந்தர் பிச்சையின் சம்பளம் 226 மில்லியன் டாலர்கள். இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் ரூ.1869 கோடியாம். இந்தத் தொகையில் 218 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்கு விருப்பத் தொகையும் அடங்கும். அதாவது கூகுள் நிறுவனத்தில் 218 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு சுந்தருடையது.
இவை மட்டும் இல்லாமல் 2019 ஆம் ஆண்டில், அவர் 281 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக பெற்றார். ஹுருன் பட்டியலின்படி, 2022 இல் அவரது நிகர மதிப்பு 1310 மில்லியன் டாலர்கள் அல்லது ரூ.10215 கோடி. அவரது வீடு மட்டும் 4,429 சதுர அடி பரப்பளவில் ரூ.10,215 கோடி மதிப்பிலானதாக இருக்கிறது.
Source:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்