அப்போது சுரேஷ் ரெய்னா அவரது நிலையை பார்த்து அவருக்கு உதவி இருக்கிறார். அப்போது ரிங்கு சிங் பற்றி அதிகம் தெரியாத போதும் அவரின் அதிரடி ஆட்டம் மற்றும் கிரிக்கெட் மீதான ஈடுபாட்டை மட்டும் பார்த்து அவருக்கு உதவி இருக்கிறார்.
சுரேஷ் ரெய்னா அப்போது அவரிடம் எந்த கேள்வியுமே கேட்கவில்லை என்பதை ரிங்கு சிங்கே தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். சுரேஷ் ரெய்னா போலவே ரிங்கு சிங்கும் இடது கை ஆட்டக்காரர் தான். அதனாலேயே, ரிங்கு சிங்கிற்கு சுரேஷ் ரெய்னா மீது கிரிக்கெட் ரசிகராக ஈடுபாடு ஏற்பட்டு இருக்கிறது.
பின்னர் சுரேஷ் ரெய்னாவை அப்படியே பின்பற்றத் துவங்கி இருக்கிறார் ரிங்கு சிங். அவரது பேட்டிங் ஸ்டைலையும் அப்படியே காப்பி அடிக்கத் துவங்கினார். பின்னர் ரெய்னாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவரிடம் ஆலோசனைகள் பெற்று தன் பேட்டிங் திறனை இன்னும் மேம்படுத்திக் கொண்டு இருக்கிறார். இது பற்றி ரிங்கு சிங் கூறுகையில், "நான் சுரேஷ் ரெய்னாவின் தீவிர ரசிகன். நான் அவரைப் பின்தொடர்ந்து அவரை அப்படியே காப்பி அடிக்க முயற்சிக்கிறேன். எனது வாழ்க்கையிலும், கேரியரிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். கிரிக்கெட் விளையாட பேட், பேட்கள் மற்றும் எனக்கு தேவையான அனைத்தையும் அவர் எனக்கு வாங்கிக் கொடுத்து உதவினார். எதுவும் கேட்காமலும் சொல்லாமலும் ஏறக்குறைய அனைத்தையும் வாங்கி அனுப்பியிருக்கிறார்." என்றார்.
மேலும், "ரெய்னா தான் எனக்கு எல்லாமே. எனக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் ரெய்னா அண்ணனை அழைத்து பேசுவேன். அவர் எனக்கு ஒரு அண்ணனை விட முக்கியமானவர். போட்டிகளில் அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பதை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். 4-5 பந்துகளை செட்டில் செய்து விட்டு டாப் கியருக்கு மாறு என அவர் எனக்கு சொன்னார். அந்த குறிப்புகள் மற்றும் பாடம் எனக்கு ஐபிஎல் மற்றும் இப்போது இந்திய அணிக்கு ஆடும் போதும் நிறைய உதவியது." என்றார் ரிங்கு சிங்.
mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
விளையாட்டு