"காசாவில் ஒரு ராணி போல் உணர்ந்தாள் என் மகள்,"-ஒரு இஸ்ரேலிய பணயக் கைதியிடமிருந்து ஹமாஸுக்கு உருக்கமான கடிதம்

"காசாவில் ஒரு ராணி போல் உணர்ந்தாள் என் மகள்,"-ஒரு இஸ்ரேலிய பணயக் கைதியிடமிருந்து ஹமாஸுக்கு உருக்கமான கடிதம்


"எனது மகளை ஒரு ராணிபோல் கவனித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 'என்று  ஹமாஸால் விடுவிக்கப்பட்ட ஒரு இஸ்ரேலியத் தாய்  ஹமாஸ் படைக்கு உருக்கமான நன்றியைத் தெரிவித்துள்ளது இன்று உலகெங்கும் பேசும் பொருளாய் மாறியுள்ளது.

விடுதலை செய்யப்படுகின்ற பணயக் கைதிகள் ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுக்கக் கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடுகளை இஸ்ரேல அரசு விதித்துள்ளது.

ஹமாஸ் படையினரைப்பற்றிய எந்த ஒரு நல்லபிப்பிராயமும் மக்கள் மனதில் எலுந்துவிடக்கூடாது என்பதில் இஸ்ரேலும் ,அமெரிக்காவும் மிகவும் கடுமையான சட்டங்களைப் பிறப்பித்துள்ளது.

ஹமாஸ் படையினரை பயங்கரவாதிகளாக உலகக்கு காட்டவேண்டும் ,அவர்கள் கொலைகாரர்கள் ,குழந்தைகளை கொடூரமாக கொலை செய்கின்றவர்கள் என்ற ஒரு பிம்பத்தை உலகுக்குக் காட்டுகின்றதில் மிகவும் மும்முரமாக இருப்பது அமெரிக்காவும்,இஸ்ரேலும்தான். 

ஏற்கனவே ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் "ஹமாஸ் படையினர் தங்களை மிகவும் கண்ணியமாக கவனித்தார்கள்" என்று தெரிவித்தது இஸ்ரேல் அரசை ஆட்டம் காண வைத்தது .

இந்நிலையில் நேற்று முன்தினம் ஹமாஸால் விடுவிக்கப்பட்டவர்கள் ,ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுக்கக் கூடாது என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது இஸ்ரேல அரசு.

நேற்று முன்தினம் ஹமாஸால் விடுதலை செய்யப்பட்டவர்களில்  Danyal and Emilia என்ற இஸ்ரேலிய தாயும் மகளும் அடங்குவர்.

விடுதலை செயப்பட்டால் இஸ்ரேலிலின் ஊடகக் கட்டுப்பாட்டால் ஹமாஸ் அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்க முடியாமல் போய்விடும் என்பதால் விடுதலைக்கு ஒருநாள் முன்பு  ஹமாசுக்கு நன்றி தெரிவித்து இஸ்ரேலியத் தாய் எழுதிய  உருக்கமான கடிதத்தை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.   

My daughter felt like a queen in Gaza, says israeli hostage released by Hamas —thank you from the bottom of my heart
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ....

"சமீபத்திய வாரங்களில் என்னுடன் வந்த தளபதிகளுக்கு,

நாங்கள் நாளை பிரிந்து விடுவோம் என்று தோன்றுகிறது, ஆனால் என் மகள் எமிலியாவிடம் நீங்கள் காட்டிய அளவு கடந்த  மனிதாபிமானத்திற்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நீங்கள் அவளுக்கு பெற்றோரைப் போல இருந்தீர்கள், அவள் விரும்பும் போதெல்லாம் அவளை உங்கள் அறைகளுக்கு அழைத்தீர்கள். நீங்கள் அனைவரும் அவளுடைய நண்பர்கள், நண்பர்கள் மட்டுமல்ல, உண்மையிலேயே நீங்கள் அன்பானவர்கள் மற்றும் நல்லவர்கள். உங்கள் அளவு கடந்த அன்பால் என் மகள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தாள்.

நன்றி, நன்றி, என் மகளுக்கு பராமரிப்பாளர்களாக நீங்கள் செலவழித்த பல மணிநேரங்களுக்கு நன்றி.

அவளிடம் பொறுமையாக அன்பு காட்டி  இனிப்புகள், பழங்கள் மற்றும் கிடைக்கும் அனைத்தையும் கொடுத்ததற்கும்  நன்றி.

குழந்தைகள் சிறைபிடிக்கப்படக்கூடாது,  உங்களுக்கும், வழியில் நாங்கள் சந்தித்த மற்ற அன்பான மக்களுக்கும் நன்றி, என் மகள் காசாவில் ஒரு ராணியாக உணர்ந்தாள்.

எங்களுடைய நீண்ட பயணத்தில், , அவளிடம் கனிவாகவும், பாசமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளாத யாரையும் அவள் சந்திக்கவில்லை.

காசாவில் நீங்கள் சந்தித்த கடினமான சூழ்நிலையிலும், நீங்கள் சந்தித்த கடுமையான இழப்புகளையும் மீறி இங்கு வழங்கப்பட்ட உங்கள் அன்பான நடத்தையை நான் நினைவில் கொள்கிறேன். இந்த உலகில் நாம் உண்மையிலேயே நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நீங்கள் அனைவரும் நலமாக வாழ என் உளமார்ந்த வாழ்த்துக்கள் ,  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரின் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமும் அன்பும்.

மிக்க நன்றி.
டான்யால் மற்றும் எமிலியா"



 



Post a Comment

Previous Post Next Post