FTX மின்னிலக்க நாணய நிறுவனத்தின் நிறுவனர் சாம் பாங்க்மன் ஃப்ரீட் (Sam Bankman Fried) வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான பல பில்லியன் டாலர் பணத்தைத் திருடியதாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை நியூயார்க் நகரில் 5 வாரங்களுக்கு நடைபெற்றது.
ஐந்தே மணி நேரத்தில் தீர்ப்பு முடிவு செய்யப்பட்டது.
பாங்க்மன் ஃப்ரீடுக்கான தண்டனை பின்னர் நிர்ணயிக்கப்படும்.
அவர் அதிகபட்சம் 110 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார்.
அமெரிக்க வரலாற்றிலேயே அவர் ஆகப் பெரிய நிதி மோசடியை மேற்கொண்டதாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.
பாங்க்மன் ஃப்ரீடின் வழக்கறிஞர், தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகச் சொன்னார்.
பாங்க்மன் ஃப்ரீட் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவார் என்றும் வழக்கறிஞர் கூறினார்.
பாங்க்மன் ஃப்ரீட் 2019ஆம் ஆண்டு FTX நிறுவனத்தைத் தொடங்கினார்.
அவர் வாடிக்கையாளர்களின் பணத்தை ஆபத்தான
முதலீடுகளுக்குப் பயன்படுத்தினார்.
அவ்வாறு 8 பில்லியன் டாலர் பணம் மாயமாய்ப் போனது.
வழக்கு விசாரணையின்போது தான் தவறுகள் செய்ததை பாங்க்மன் ஃப்ரீட் ஒப்புக்கொண்டார்.
ஆனால் யாரையும் மோசடி செய்யவில்லை என்று அவர் சொன்னார்.
Source:seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்