81.வினா : செய்யாது தவிர்க்க வேண்டுவன யாவை?
விடை: பழிச்செயல்களே
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.(40)
82.வினா : இறுதி வரை பேணிக் காக்க வேண்டியவர்கள் யார்?
விடை : பெற்றோர். மனைவி, மக்கள்
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.(41)
83.வினா : எந்த ஐவரைப் போற்றிக் காப்பது கடமையாகும்?
விடை: அறிஞர், வாழ்வாங்கு வாழ்பவர், விருந்தினர், உறவினர், தான்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.(43)
84.வினா :நற்செயல்களை தாம் எங்கிருந்து செய்யலாம்?
விடை :நாம் இல்லத்தில் இருந்தே செய்யலாம்
அறந்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்,(46)
85.வினா: அறன் எனப்படுவது எது?
விடை: அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று,(49)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்