வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-20

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-20


96.வினா : தந்தையின் கடமை யாது?
விடை: தம் மக்களை, கற்றோர் முன் கற்றவராய் இருக்கச் செய்தல் 
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்,(67)

97.வினா : ஒரு தாய் எப்போது மகிழ்வாள்?
விடை: தன் மகனைச் சான்றோன் எனக் கேட்கும் போது 
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.(69)
 
98.வினா : மகனின் கடமை யாது?
விடை: இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ எனக் கேட்கும்படி இருத்தல் 
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல்,(70)

99.வினா : அன்பை எது வெளிப்படுத்தும்?
விடை: அன்புடையாரது கண்ணீர் 
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்.(71)

100.வினா : எல்லாம் எனக்கே என வாழ்பவர் யார்?
விடை: அன்பில்லாத சுயநலவாதிகள் 
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.(72)

(தொடரும்)
 


 



Post a Comment

Previous Post Next Post