தூரமில்லை வானம்! (கவிக்கூ)

தூரமில்லை வானம்! (கவிக்கூ)


வானைப் பார்க்கையில்
கைப்பிடித்து நடந்தது
நிலா

நட்சத்திரக் கூட்டத்தில்
அப்பாவைத் தேடுகிறாள்
அனாதை இல்ல குழந்தை

ஆசையை அடக்கிவிட
புதிய மரம் தேடுகிறான்
கலியுக புத்தன்

கற்களை உரசியதில்
பற்றிக்கொள்கிறது
ஆடை துறந்த காமம்

நுரை ததும்பிய குவளையில்
நூறு குமிழிகளாய் 
வெள்ளி நிலா

தூரமில்லை வானம்
நம்பிக்கை படிகளில் எழுதிய
வானமே எல்லை

சே கார்கவி கார்த்திக்


 



Post a Comment

Previous Post Next Post