500, 1000 இல்ல.. முழுசா 2மில்லியன் கார்களை திருப்பி அழைக்கும் டெஸ்லா! இதுதான் வேணம்னு வாங்கியவர்களுக்கு ஷாக்!

500, 1000 இல்ல.. முழுசா 2மில்லியன் கார்களை திருப்பி அழைக்கும் டெஸ்லா! இதுதான் வேணம்னு வாங்கியவர்களுக்கு ஷாக்!


2023 ஆம் ஆண்டின் மிகப் பெரிய ரீ-கால் என கூறும் அளவிற்கு மிகப் பிரமாண்ட எண்ணிக்கையில் டெஸ்லா அதன் தயாரிப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றது. தன்னுடைய எலெக்ட்ரிக் கார்கள் சிலவற்றில் பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகக் கூறியே இந்த அழைப்பை உலக புகழ்பெற்ற நிறுவனம் விடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலக புகழ்பெற்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, சுமார் 2 மில்லியன் கார்களையே உடனடியாக திருப்பிக் கொண்டு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் முக்கிய பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றான ஆட்டோ பைலட் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் (Autopilot advanced driver-assistance system) சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை முன்னிட்டே இந்த அழைப்பை நிறுவனம் விடுத்திருக்கின்றது.

இந்த அழைப்பு அமெரிக்காவிற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இந்த காரை இந்தியர்கள் சிலர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்த அழைப்பு பொருந்துமா என்பது தெரியவில்லை. அப்படியே பொருந்தினாலும், இதை சரி செய்ய என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களும் வெளியிடப்படவில்லை.

டெஸ்லா நிறுவனம் முதன் முதலில் இந்த தொழில்நுட்பத்தை கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது. டெஸ்லாவின் இந்த தன்னியக்க தொழில்நுட்பம் வாகன உலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இந்த அம்சம் கார்களை தானாக பாதையை மாற்றிக் கொள்ள அனுமதிப்புடன், தானாகவே பிரேக் பிடித்தல், வேகத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றையும் அது செய்யும். இந்த அம்சத்திலேயே குறைபாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை சரி செய்யவே அந்நிறுவனத்திற்கு அமெரிக்க வாகன பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர்கள் அமைப்பு வலியுறுத்தி இருக்கின்றது. இந்த அழுத்தத்தின் அடிப்படையிலேயே டெஸ்லா 2 மில்லியன் கார்களுக்கு ரீ-காலை விடுத்திருக்கின்றது. கடந்த எட்டு ஆண்டுகளில் டெஸ்லா தன்னுடைய ஆட்டோபைலட் சிஸ்டத்தை பலமடங்கு மேம்படுத்தி இருக்கின்றது.

மிக முக்கியமாக ஆட்டோ ஸ்டியரிங்கைச் சேர்த்தல் மற்றும் டிராஃபிக்கிற்கு ஏற்ப க்ரூஸ் கன்ட்ரோல் செய்தல் ஆகியவற்றை அது செய்தல் போன்ற சிஸ்டங்களை அது மிக சிறந்த நிலைக்கு மேம்படுத்தி இருக்கின்றது. இவை மனித தலையீடு இல்லாமலேயே வாகனங்கள் பாதுகாப்பாக பயணிக்க உதவுகின்றன. இந்த அம்சத்தில் சில சிக்கல் ஏற்பட்டதன் விளைவாக கடந்த காலங்களில் பல விபத்துகள் அரங்கேறின. இந்த நிலையிலேயே டெஸ்லா கார்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்குறித்த கேள்வி எழும்பியது. இதுகுறித்து நடைபெற்ற ஆய்வுகளை அடுத்தே டெஸ்லா நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்து, இந்த சிக்கல்கள்மீதான நடவடிக்கை எடுக்க வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ரீ-கால் ஆனது டெஸ்லாவின் மாடல் ஒய், மாடல் எஸ், மாடல் 3 மற்றும் மாடல் எக்ஸ் ஆகிய மாடல்களுக்கு பொருந்தும். மேலும், அக்டோபர் 5, 2012 தொடங்கி டிசம்பர் 7, 2023 வரையில் தயாரித்த அனைத்து கார்களுக்கும் இந்த ரீ-கால் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ரீ-காலின்கீழ் பாதிப்பு இருப்பதாக அறியப்படும் சாதனம் சரி செய்யப்பட அல்லது மாற்றித் தரப்பட இருக்கின்றது. மேலும், கட்டணம் இன்றி குறைப்பாடுகள் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக அளவில் டெஸ்லாவின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த ரீ-கால் விடுக்கப்பட்டு இருக்கின்றது. டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா இன்னும் ஒரு மாதங்களில் இந்தியாவில் கால் தடம் பதித்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், வருகின்ற 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்திய சாலைகளில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை பார்த்துவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் டெஸ்லாவின் மாடல் 3 அல்லது மாடல் ஒய் இரண்டில் ஏதேனும் ஓர் கார் மாடலே இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்றது.


drivespark


 



Post a Comment

Previous Post Next Post