அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் ஜாமின் கோரி அவரது தரப்பில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே வழக்கில் சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி சார்பிலும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இருவரும் தலா 10 லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், உச்சநீதிமன்றம் ஜாமின் அளித்தபோதும் அவர் விடுதலையாவதில் சிக்கல் நீடிக்கிறது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments