பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பி

பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பி

1947ல் ஒன்றுபட்ட இந்தியா சுதந்திரமடைந்த போது இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவானது.

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு நாடாகும். அங்கு 96.47 சதவீதம் மக்கள் இஸ்லாமிய மதத்தவர்கள்; 2.14 சதவீதம் பேர் மட்டுமே இந்துக்கள்.

இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முதல் பெண் துணை காவல்துறை கண்காணிப்பாளர் (DSP) பதவிக்கு 26 வயதான இந்து மதத்தை சேர்ந்த பெண் (Manisha Ropeta) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தனது இந்த அரிய சாதனை குறித்து பேசிய மனிஷா, "பெண் என்னதான் கடினமாக படித்தாலும் மருத்துவப்பணி அல்லது ஆசிரியை பணியில் மட்டுமே செல்ல முடியும் என்பதை சிறு வயது முதலே நான் கேட்டு வந்துள்ளேன்.

காவல்துறையிலும், நீதிமன்றங்களிலும் பெண்கள் பணியாற்ற கூடாது எனும் நம்பிக்கையை தகர்ப்பதே எனது லட்சியமாக இருந்தது. பல குற்றங்களில் பாதிக்கப்படுவது பெண்ணினம்தான்.

சமுதாயத்தில் உள்ள பெண்களை காக்கும் விதமாக ஒரு பெண் பாதுகாவலர் தேவை என நினைத்ததால் காவல்துறையில் சேர்ந்தேன்

நான் கடந்து வந்த பாதை எளிதானதாக இல்லையென்றாலும் எனக்கு பலரும் ஊக்கம் அளித்தனர்" என கூறினார்.

maalaimalar


 



Post a Comment

Previous Post Next Post