கோவையில் கிருஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.

கோவையில் கிருஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.


21-12-2023 ஆம் நாள் கோவை ஹோலி ஃபேமிலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9-30 மணிக்கு கிருஸ்துமஸ் விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இறைவாழ்த்துடனும்,  வரவேற்புடனும்  விழா இனிதே தொடங்கியது.

 விழாவுக்குப் பள்ளி முதல்வர் சிஸ்டர் ‌ஜீஸ் மரியா தலைமை தாங்கினார்., பள்ளித் தாளாளர் சிஸ்டர் ஷோஃபி ஜேகப்., மற்றும் துணை முதல்வர் சிஸ்டர் நவீனா பவுல் முன்னிலை வகித்தனர்.


ஃபாதர் சகோ ஜெரீன் புலிகோட்டில்., மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் குறள் யோகி, தமிழ்ச் செம்மல் முனைவர் அன்வர் பாட்சா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளி மூத்த மாணவர் கிருஸ்துமஸ் தாத்தாவாக வந்து மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தார்.

தொடர்ந்து மாணவச் செல்வங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அனைவருக்கும் கிருஸ்துமஸ் கேக்  வழங்கப்பட்டது.

பள்ளி ஆசிரியர்கள் விழாவினை மிகச்சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

அத்துடன் விழா நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது.


 



Post a Comment

Previous Post Next Post