பனிவரகு கஞ்சி:
தேவையான பொருட்கள்:
கைப்பிடி அளவு -பனிவரகு
தண்ணீர்- முக்கால் லிட்டர்
தேங்காய் பற்கள் -ஒரு டேபிள் ஸ்பூன்
உலர்ந்த அத்திப் பழங்கள்- ஆறு துண்டுகள்
உலர்ந்த திராட்சை- இரண்டு தேக்கரண்டி
சுக்குத்தூள்- ஒரு தேக்கரண்டி
அதிமதுரத் தூள் -ரெண்டு தேக்கரண்டி
ஏலக்காய் தூள் -சிறிதளவு
பால்- ஒரு டம்ளர்
நாட்டுச் சர்க்கரை- தேவையான அளவு
செய்முறை:
பனிவரகை தண்ணீரில் வேகவிடவும். பின் வேகும்போதே அதனுடன் தேங்காய் பற்கள், அத்திப்பழங்கள், உலர்ந்த திராட்சை, சுக்குத்தூள், அதிமதுரத்தூள் ஆகியவற்றுடன் ஏலக்காய் தூள் சேர்த்து காய்ச்சி நன்றாக வெந்ததும் இறக்கி ஆற விட்டு, அதனுடன் பாலும், நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து பருகவும்.
தேவையான அளவு பருகினால் போதும். இது உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களையும் கொடுக்கும். உடல் பலம் பெறும் மற்றும் ஆரோக்கியம் அடையும் .களைப்பு, சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறலாம்.
இதே போல் கருப்பு கவுனி அரிசி குருணை, சிவப்பரிசி வகைகள், திணை, பார்லி போன்றவைகளில் செய்தும் பயன்பெறலாம்.
பேரிச்சம் பழ டானிக்:
தேவையான பொருட்கள்:
கொட்டை நீக்கிய பேரிச்சம்பழம் -4
காய்ச்சிய பால் -2 டம்ளர்
குங்குமப்பூ -ஒரு சிட்டிகை
ஏலத்தூள்- ரெண்டு சிட்டிகை
தேன் -2 தேக்கரண்டி அளவு.
செய்முறை:
பேரிச்சம் பழங்களை காய்ச்சிய பாலில் நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு குங்குமப்பூ, ஏலத்தூள், தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அருந்த வேண்டும். இதை அனைவரும் அருந்தலாம். குறிப்பாக ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்ல புத்துணர்ச்சியைத் தரும் டானிக். உடம்பிற்கு அதிக அளவு சக்தியை கொடுக்கக்கூடிய டானிக் இது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த பானம் இது. இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ரத்த சோகையை நீக்கிக்கொள்ள இதை அடிக்கடி அருந்துவது அவசியம். இதனால் மலச்சிக்கலும் தீரும்.
kalkionline
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments