ரோபோ போன்று உணவு பரிமாறிய பெண்ணின் காணொலி வைரல்

ரோபோ போன்று உணவு பரிமாறிய பெண்ணின் காணொலி வைரல்


பெய்ஜிங்:சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு காணொலியில் உணவகம் ஒன்றில் ரோபோ போன்று ஒரு பணிப்பெண் உணவு பரிமாறும் காட்சிகள் பயனர்களைக் கவர்ந்துள்ளது.

இந்தக் காணொலி சீனாவிலுள்ள ஓர் உணவகத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவிலுள்ள பணிப்பெண் ரோபோவைப் போன்றே வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறார்.

பார்ப்பதற்கு உண்மையான ரோபோ பரிமாறுவது போன்று வாடிக்கையாளர்கள் கருதும் வகையில் அந்தப் பெண்ணின் அசைவுகள் அனைத்தும் துல்லியமாக ரோபோவைப் போன்று இருக்கிறது.

அந்தக் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. 

பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

nambikkai


 



Post a Comment

Previous Post Next Post