Ticker

6/recent/ticker-posts

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருக்கு எருமை மாட்டை பரிசளித்த மாமனார் - என்ன காரணம் தெரியுமா?


ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கு அவரது மாமனார் எருமை மட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் (ஆகஸ்ட் 11) நிறைவு பெற்றது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். 

நேற்று நாடு திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவருக்கு பாகிஸ்தான் அரசு மற்றும் தொழிலதிபர்கள் பணம், கார் என பல்வேறு பரிசுகளை அறிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான 'ஹிலால்-இ-இம்தியாஸ்' விருதை வழங்கி கவுரவிக்க உள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. 

இந்நிலையில் அர்ஷத் நதீமின் மாமனார் அவருக்கு எருமை மாடு ஒன்றை பரிசாக அளித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்து அவரது மாமனாரின் கேட்ட போது, எருமை மாட்டை பரிசளிப்பது என்பது ஒருவருக்கு அதிக செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதற்கான அடையாளம். எங்கள் கிராமத்தில் இதுதான் நடைமுறை. அதனால், எனது மருமகனுக்கு எருமை மாட்டை பரிசளித்தேன் என்று கூறியுள்ளார். 

மேலும், அர்சத் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் தான் அவர் ஆரம்ப காலத்தில் பயிற்சிக்கு செல்வதற்கு, கிராம மக்களும், உறவினர்களும் நன்கொடையாக பணத்தை வசூல்செய்து உதவினர். 6 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளை திருமணம் செய்து கொடுத்த போது அவர் சிறிய வேலைகளை தான் செய்துவந்தார். என அவரை பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.     


ibctamilnadu



 



Post a Comment

0 Comments