Ticker

6/recent/ticker-posts

ஒரு வாத்து வாங்குவதற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறுமி - 14 வயதில் சாதனை


ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் வாத்து வாங்கி தருவதாக பெற்றோர் கூறியுள்ள நிலையில் 14 வயது சிறுமி பதக்கம் வென்றுள்ளார்.

சிறு வயதில் குழந்தைகள் ஏதாவது பொருளை வாங்கி தர சொல்லி கேட்டால் இதை செய்தால் வாங்கி தருகிறேன் என பெற்றோர்கள் நிபந்தனைகள் விதிப்பார்கள். பெரும்பாலான பெற்றோர் முதல் மதிப்பெண் எடுத்தால் வாங்கி தருவதாக நிபந்தனை விதிப்பார்கள். 

ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெற்றோர் தனது 14 வயது மகள் அரிசா ட்ரூ வாத்து வாங்கி தருமாறு கேட்டதற்கு ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றால் வாத்து வாங்கி தருவதாக கூறியுள்ளார்கள். 

ஸ்கேட்போர்டு விளையாடும் இவர், பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் கலந்து கலந்து கொண்ட இவர், கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற பெண்களுக்கான ஸ்கேட்போர்டு பார்க் இறுதிப்போட்டியில், ஜப்பான் வீராங்கனையை பின்னுக்கு தள்ளி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் குறைந்த வயதில் தங்கம் வென்ற இளம் வீராங்கனை என்ற சாதனையை அரிசா ட்ரூ படைத்துள்ளார். 

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அரிசா ட்ரூ, நான் கடைசி சுற்றுவரை பின் தங்கி தான் இருந்தேன், இறுதியில் நான் வெற்றி பெற்றது எனக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியாக இருந்தது. வாத்துகள் மிகவும் அழகாக இருக்கின்றன. நான் வெற்றி பெற்றால் செல்லப்பிராணியாக வாத்து வாங்கி தருவதாக பெற்றோர் கூறினார்கள். எனக்கு ஒரு வாத்து வேண்டும் என சிரித்து கொண்டே பேசினார். 

ibctamilnadu



 



Post a Comment

0 Comments