Ticker

6/recent/ticker-posts

ரூ.2650-க்கு சாப்பிட்ட நபர் ரூ.8.30 லட்சம் டிப்ஸ் ... ஹோட்டல் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்


அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்ட நபர், பணியாளருக்கு ரூ.8.30 லட்சம் டிப்ஸ் வழங்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் மெக்சிக்கோ மாகாணத்தில் உள்ள “தி மேசன் ஜார் கபே” என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்க் என்பவர் காலை உணவு சாப்பிட சென்றுள்ளார். அவர் சாப்பிட்டதற்கான தொகை தொகை 32 டாலருக்கான பில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நபர் சாப்பிட்டதற்கான தொகையை செலுத்திவிட்டு சென்றுள்ளார். சில நிமிடங்கள் கழித்து அந்த பில்லை எடுத்து பார்த்த ஊழியர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

காரணம் அந்தப் பில்லின் டிப்ஸ் பிரிவில் 10,000 டாலர்கள் என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 8.30 லட்சம் ஆகும். இதை கண்ட ஊழியர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.  பொதுவாக அந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் 15 முதல் 25 வரை டிப்ஸ் வழங்குவது வழக்கம். ஆனால் ரூ.2650-க்கு சாப்பிட்ட மார்க் பல லட்சங்களை டிப்சாக வழங்கியுள்ளார்.

இது குறித்து அந்த பணியாளர் தனது மேலாளரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த மேலாளர் மார்க் இடம் சென்று டிப்ஸ் தொகையில் 10.000 டாலர் என எழுதியுள்ளது. தவறுதலாக எழுதி விட்டீர்களா என கேட்டுள்ளார். அதற்கு மார்க், அவை நான் டிப்ஸாக வழங்கியவை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த மார்க், “எனது நெருங்கிய நண்பர் உயிரிழந்துவிட்டார். அவரது நினைவாக நான் இந்த டிப்ஸ் வழங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.

news18


 



Post a Comment

0 Comments