Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-27


131. வினா : ஏழுபிறவிகளிலும், எக்காலத்திற்கும் நமக்குப் பாதுகாப்பானது எது?
விடை : ஐம்பொறியடக்கம் 
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து.(126)

132. வினா : கயிறு வரும் குறள் எது?
விடை : பருவத்தோடு ஒட்ட ஒழுகல் 
திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு.(482)

133. வினா : மிக முக்கியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது எது?
விடை : நாவினைக் காக்க வேண்டும் 
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
(127)

134. வினா : நாம் செய்த பல நன்மைகளைக் கெடுத்துவிடும் எது?
விடை : ஒரே ஒரு தீய சொல் 
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
(128)

135. வினா : நாளடைவில் ஆறி விடும் எது?
விடை: தீப்புண் 
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.
(129)

(தொடரும்)
 


 



Post a Comment

0 Comments