வேற்றுகிரகவாசிகள் ஆட்சி செய்யக்கூடிய இரண்டு உலகங்களை கண்டுபிடித்துள்ளதாக விண்வெளி நிபுணர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். அவை நம் பூமியை விட கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவை மனிதர்களை கூட அழிக்கக்கூடிய சக்திவாய்ந்தவை எனவும் கூறப்பட்டுள்ளது.
டெய்லி ஸ்டார் பத்திரிக்கையின் அறிக்கையின்படி, கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேன் ப்ரீவ்ஸ், 70 முதல் 110 ஒளியாண்டுகளுக்கு இடையே அமைந்துள்ள நமது விண்மீன் மண்டலத்தில் குறைந்தது இரண்டு உலகங்கள் இருக்கலாம் என்று கூறுகிறார். அங்கு வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம் என்றும், அந்த கிரகங்கள் பூமியை விட மிகவும் பழமையானவை என்றும் ஜேன் பிரீவ்ஸ் கூறுகிறார்.
‘அவர்கள் நம்மை விட கோடிக்கணக்கான ஆண்டுகள் முன்னர் தோன்றியதாகவும், ஒருவேளை நம்மை அழிக்கவும் தயாராக இருக்கலாம்’ ஜேன் பிரீவ்ஸ் என்றும் கூறினார்.
பூமிக்கு முன் அங்கு உயிர்கள் தோன்றின?
‘இந்த உலகங்கள் சூரியனை விட மிகவும் பழமையானவை. அதாவது, சுமார் 8 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. எந்த கிரகமும் குறைவான கதிரியக்கமாக மாறுவதற்கு நேரம் உள்ளது. ஆக, இந்த பாறை உலகங்கள் உண்மையில் உள்ளதா என்பதை கூடிய விரைவில் கண்டுபிடிப்பது நல்லது. அவ்வாறு செய்தால், அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயம் பூமிக்கு பல கோடி ஆண்டுகள் முந்தைய தேதியாக இருக்ககலாம்’ என்று கூறினார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments