எதிர்வரும் தேர்தல்களை இலக்குவைத்து ராஜபக்ஸர்களின் மொட்டுக் கட்சியும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் திரைக்குப் பின்னால் ஒன்றுகூடி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“நான் பொதுஜன பெரமுணவை பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பயணிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை” என வன ஜீவராசிகள், வனவள பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்ததுடன், கொவிட் – 19 பெருந்தொற்றை ஒழிக்க ஆற்றில் மந்திரித்த முட்டையை விட்டதுடன், தம்மிக்க பெணி போன்ற திரவங்களையும் அறிமுகப்படுத்தினார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments