ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் போது 31,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத் திட்டமிடலுக்கு உதவும் என்பதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை வழங்கமாட்டோம் என்று உக்ரைன் அதிபர் கூறினார்.
பொதுவாக, உக்ரேனிய அதிகாரிகள் உயிரிழப்பு புள்ளிவிவரங்களை பொதுவில் வெளியிடுவதில்லை, மற்ற மதிப்பீடுகள் மிக அதிகமாக இருக்கும்.
உக்ரேனுக்கான அனைத்து மேற்கத்திய உதவிகளில் ஏற்பட்ட கால தாமதத்தின் கரணமாக , உயிர்கள் மற்றும் பிரதேசங்களை இழந்ததாக பாதுகாப்பு அமைச்சர் கூறியதை அடுத்து இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், உக்ரைனுக்கான 60 பில்லியன் டாலர் உதவியை காங்கிரஸ் நிறுத்தி வைத்தது உக்ரைனின் பலநகரத்தின் வீழ்ச்சிக்கு காரணமாயிருந்து என்று பிடன் நிர்வாகம் கூறியுள்ளது.
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேற்கத்திய தலைவர்கள் உக்ரைனுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் சனிக்கிழமையன்று கிய்வ் நகருக்குச் சென்றனர்.
அங்கு, இத்தாலி மற்றும் கனடா உக்ரைனுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டது - நாடு நேட்டோவில் சேரும் வரை ஆதரவு தொடரும் என்று தெரிவித்துள்ளது.
கனடாவின் ஒப்பந்தத்தில் மூன்று பில்லியன் கனடிய டாலர்கள் (£1.7bn) உக்க்ரைனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments