Ticker

6/recent/ticker-posts

"காஸாவில் பஞ்சத்தையும் பசியையும் போக்க உடனடி நடிவடிக்கை எடுக்கப்பட வேண்டும்"


காஸாவில் மக்கள் அதிகம் இருக்கும் தென் பகுதியில் பஞ்சம் ஏற்படுவதைத் தடுக்கமுடியாமல் போகக்கூடும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அத்தகைய நிலைமை உண்டாகக்கூடும் என்று அவர் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்திடம் தெரிவித்தார்.

பகைமை தொடரும் வேளையில் காஸாவின் மக்கள்தொகையில் கால்வாசிப் பேர் பஞ்சத்தால் வாடக்கூடிய நிலைமை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சண்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஊட்டச் சத்துக் குறைபாடு, தண்ணீர்த் தட்டுப்பாடு போன்றவற்றால் ஆயிரக்கணக்கானோர் அடுத்த சில நாள்களில் மாண்டுபோகக்கூடும் என்று ஹமாஸ் சுகாதார அமைச்சு எச்சரித்தது.

அத்தியாவசிய உதவிப்பொருள்கள் கொண்டுசெல்லப்படுவதை இஸ்ரேல் தள்ளிப்போடுவதாக நிவாரண அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

அதனை டெல் அவீவ் (Tel Aviv) மறுத்துவருகிறது. 

seithi


 



Post a Comment

0 Comments