ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115-ஆக உயர்ந்துள்ளது. நேரடி தாக்குதல் நடத்திய 4 பேர் உள்பட 11 பேரை ரஷ்ய காவல்துறை கைது செய்துள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் க்ரோகஸ் சிட்டி ஹாலில் வெள்ளிக்கிழமை பிக்னிக் என்ற இசை குழுவினரின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அதில், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அப்போது ராணுவ உடையுடன் திடீரென துப்பாக்கியுடன் 4 பேர் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசினர். இதில் அரங்கின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.
இந்த பயங்கரவாத தாக்குதலில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். பலர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மாஸ்கோவில் நடந்த மிக மோசமான பயங்கர தாக்குதல் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனிடையே, நேரடி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் உள்பட 11 பேரை ரஷ்ய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாஸ்கோ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவின் இந்த துயரமான நேரத்தில் இந்தியா துணை நிற்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments