Ticker

6/recent/ticker-posts

"இஸ்ரேலியப் பிரதமர் நாட்டுக்கு உதவவில்லை...நாட்டைக் காயப்படுத்துகிறார்!"

காஸாவில் தொடரும் சண்டையில் இஸ்ரேலியப் பிரதமரின் அணுகுமுறையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சாடியுள்ளார்.


"இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) நாட்டுக்கு உதவவில்லை...நாட்டைக் காயப்படுத்துகிறார்," என்று அவர் சொன்னார்.

இஸ்ரேலைத் தற்காக்கும் உரிமை திரு நெட்டன்யாஹுவுக்கு இருந்தாலும் ஹமாஸுக்கு எதிரான சண்டையில் அப்பாவிகள் உயிரிழப்பதை அவர் கருத்தில் கொள்ளவேண்டும் என்று திரு பைடன் கூறினார்.

காஸாவின் தெற்கில் உள்ள ராஃபா (Rafah) நகரில் தாக்குதல் நடத்தவிருப்பதாகத் திரு நெட்டன்யாஹு கூறியிருக்கும் நிலையில் திரு பைடன் அவ்வாறு சொன்னார்.

"ஒரு வரம்பு உண்டு....மேலும் 30,000 பாலஸ்தீனர்கள் மரணமடையக் கூடாது," என்று கூறிய அவர் இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று சொன்னார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய சண்டையில் காஸா வட்டாரத்தில் 30,800க்கும் அதிகமானோர் மாண்டனர்.

seithi


 



Post a Comment

0 Comments