Ticker

6/recent/ticker-posts

இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பு இலக்கியப் போட்டிகள் - 2024


இலங்கை இலக்கியத்தை வளர்த்து, செழிப்புறச் செய்யும் வகையில் பங்களிக்கக்கூடிய எழுத்தாளர்களின் தலைமுறை ஒன்றை உருவாக்கும் நம்பிக்கையில் இலங்கை  எழுத்தாளர்கள் அமைப்பு 2024. ஆம் வருடத்திற்கான இலக்கியப் போட்டிகளை நடத்த  நடவடிக்கை எடுத்துள்ளது.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும்.

இதன்பொருட்டு  கவிதைகள் மற்றும் சிறுகதைகளை மட்டுமே சமர்ப்பிக்க முடியும். இது ஒரு திறந்த போட்டியாகும்.

பொதுவான நிபந்தனைகள்:
தேசிய  இலக்கிய விருதைப் பெறாத எழுத்தாளர்கள் அல்லது மூன்றுக்கும் குறைவான கவிதை அல்லது சிறுகதை தொகுப்புக்கள் வெளியிட்டவர்கள் இதில் பங்கேற்க முடியும். 

கவிதை : 
  • ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு படைப்பைச் ஏதோ ஒரு மொழி மூலம்  போட்டிக்கு சமர்ப்பிக்கலாம். 
  • அவை யாப்புக் கவிதைகளாக அல்லது புதுக்கவிதைகளாக இருக்கலாம்.

சிறுகதை படைப்பு: 

  • ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு சிறுகதை படைப்பை ஏதாவது ஒரு மொழி மூலம்  போட்டிக்கு சமர்ப்பிக்கலாம்.
  • படைப்புகளுக்கு எழுத்து மொழியையும் பேச்சுமொழி நடையையும் பயன்படுத்த முடியும்.
  • படைப்புகள் தெளிவான கையெழுத்து அல்லது கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு A4 தாள்களின் ஒரு பக்கத்தை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்திருத்தல் வேண்டும்.
  • உங்கள் படைப்பாக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டிருக்கும் போது, பக்கங்கள் இலக்கமிடப்பட்டு இருக்க வேண்டும் .
  • படைப்பின் ஒரு நகலை உங்களுடன் வைத்திருப்பது முக்கியம். எழுத்தாளர் அமைப்புக்கு அவற்றைத் திருப்பித் தர வேண்டிய கடப்பாடு இல்லை.
  • போட்டியிடும் அனைத்து படைப்புக்களும் உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். 

மேலும், எந்த படைப்பும் ஏற்கனவே அச்சில் வெளியிடப்பட்டிருக்கக் கூடாது என்பதுடன் வேறொருவரின் படைப்பின் ஏதேனும் பகுதி அல்லது தழுவலாக.  இருந்தால் அல்லது போட்டியின் நிபந்தனைகள் மீறப்பட்டால்  போட்டியின் எந்தக் கட்டத்திலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வெற்றும் வெரிதும் ஆக்கப்படும். 

அதேபோல் இத்தகைய போட்டிகளுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்டு வெற்றி பெற்ற படைப்புகள் சமர்ப்பிக்கப்படலாகாது..

படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 31 மே 2024 ஆகும்.

உங்கள் படைப்புகள் இலக்கியத் துறையின் துறை சார் வல்லுநர்களால் மதிப்பாய்வு செய்யப்படுவதுடன் அதன் அடிப்படையில் வெற்றியாளர்களுக்கு விருதுகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் இவ்வாண்டு இறுதிக்கு முன் வழங்கப்படும் . 

விண்ணப்ப படிவத்தில் சேர்க்கப்பட வேண்டிய அடிப்படை தரவுகள்:
விண்ணப்பதாரரின் பெயர்... படைப்பாக்கத்தின் பெயர்.
சேர்க்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை.
நிரந்தர முகவரி... தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்கள்.
மின்னஞ்சல் முகவரி... மற்றும் சுய படைப்பு என்ற பிரகடனம்.

உங்கள் படைப்புகள் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். 


Secretary 
Writers Organization of Lanka
119A
Polhena
Kelaniya,
Sri Lanka.

மேலதிக தகவல்களுக்கு ,
செய\லாளர் கமல் பெரேரா-0773655151
இரா . சடகோபன்  ; 0 7 7 7679231
மேமன் கவி ; 0778681464


 



Post a Comment

0 Comments