Ticker

6/recent/ticker-posts

எனக்கே ஆச்சர்யமா இருக்கு.. 2 பந்துலயே அதை கணிச்சுட்டேன்.. மும்பையை வீழ்த்திய ஆட்டநாயகன் சுதர்சன் பேட்டி


ஐபிஎல் 20204 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் மும்பையை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் தொடரை வெற்றியுடன் துவங்கியது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் போராடி 20 ஓவரில் 168/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 45 (39), கேப்டன் கில் 31 (22), திவாடியா 22 (15) ரன்கள் எடுத்தனர். 

மும்பை சார்பில் அதிகபட்சமாக பும்ரா மூன்று விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 169 ரன்களை துரத்திய மும்பைக்கு இஷான் கிசான் டக் அவுட்டானாலும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 43 (29), நமன் திர் 20 (10), தேவால்ட் பிரேவிஸ் 46 (38) ரன்கள் அடித்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். ஆனால் கடைசியில் திலக் வர்மா 25 (19), டிம் டேவிட் 11 (10), கேப்டன் பாண்டியா 11 (4) ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினர்.

அதன் காரணமாக 20 ஓவரில் 162/9 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை போராடி தோற்றது. மறுபுறம் அசத்தலான வெற்றி கண்ட குஜராத் சார்பில் அதிகபட்சமாக ஹோமர் சாய், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். குஜராத்தின் இந்த வெற்றிக்கு சவாலான பிட்ச்சில் க்ளாஸ் இன்னிங்ஸ் விளையாடி 45 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில் வெற்றிக்கு பவுலர்கள் முக்கிய பங்காற்றிய போது தமக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது ஆச்சரியம் என்று சாய் சுதர்சன் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார். அதே சமயம் ஒரு சில பந்துகளை எதிர்கொண்டதும் அகமதாபாத் பிட்ச் அதிரடியாக விளையாடுவதற்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்து பேட்டிங் செய்ததாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“முதல் இன்னிங்சிலும் பேட்டிங் சற்று கடினமாகவே இருந்தது. பனி பவுலர்களுக்கு பின் செல்ல அவர்களுக்கு உதவியது. ஆனால் கடைசியில் போட்டியை நாங்கள் இழுத்துக் கொண்டு வந்தோம். கடினமான சூழ்நிலையை நான் அழுத்தமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு என்னுடைய செயல்பாடுகளை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க உதவினேன்”

“சில பந்துகளை எதிர்கொண்டதும் இந்த பிட்ச்சில் ஒவ்வொரு ஓவரிலும் உங்களால் அதிரடியாக பந்துகளை எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்தேன். எனவே போட்டியை மெதுவாக உருவாக்குவதே முக்கியம். உண்மையில் ஆட்டநாயகன் விருது எனக்கு கொடுக்கப்பட்டது ஆச்சரியம். ஏனெனில் வெற்றிக்கு பல பங்களிப்பு இருந்தது. வேகப் பந்துகளில் வேகத்தை குறைப்பது எங்களுடைய திட்டங்களில் ஒன்றாக இருந்தது” என்று கூறினார்.

crictamil


 



Post a Comment

0 Comments