Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-4


செரோக்கியின் பாட்டன் இறக்கும்போது அவனது தந்தை அருகிலிருந்துள்ளார்!  அவரது பூதவுடல் பண்டிகைத் திடலுக்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டுள்ளதை செரோக்கி அறிந்து வைத்துள்ளான்! 

வருடத்தில் ஒருநாள் வனத்தில் வாழ்கின்றவர்கள் தீ மூட்டி, வகை வகையான உணவுப் பண்டங்களை உண்டபடி, நடனமாடிக் கொண்டு தமது பண்டிகையைக் கொண்டாடுவார்கள்!

பக்கத்துக் கிராமத்து வனவாசிகள் கூட அந்தப் பண்டிகைக்கு வருவார்கள்!

சூழவுள்ள வனங்களில் பல்லினப் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். காட்டுக்குள் நூற்றுக்கணக்கான கிராமங்கள் காணப்படுகின்றன.

இங்கு வாழும்  பழங்குடி குழுக்‍களைச் சேர்ந்த மக்‍கள் நூற்றுக்கணக்கான வேறுபட்ட மொழிகள் பேசுகின்றனர்!“விந்தியதேசத்துத் தமிழ்” இங்கு பரவலாகப் பேசப் படுகின்றது.

கிராமத்துக்குக் கிராமம் வேறுபட்ட சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பாரம்பரியங்களையும்  அவர்கள் பாதுகாத்து வருகின்றனர்! அவர்கள் இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாகவே வாழ்ந்து வருகின்றனர். 

அந்த நாளில் செரோக்கியின் பெற்றோர் அவனை கூட்டிக் கொண்டு பண்டிகைத் திடலுக்குப் போவதோடு - அவர்கள் முன்னோர்களின் மண்ணறைகளையும் தரிசிப்பார்கள்!

மண்ணறைகளுக்குச் செல்கின்ற எல்லா நேரங்களிலும் செரோக்கியின் தந்தை பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம்!

“உலகில் நல்லவர்கள் நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உங்களது ஆசை ஒருபோதும் நிராசையாகி விடாது! எல்லாவற்றிற்கும் மேலாளன் துணை!” 

தந்தையின் பிரார்த்தனையின் இறுதி வரிகள் எப்போதும் அவனது உள்ளுணர்வை ஊடுருவனவாகவே அமைந்தன. 

தனது தோள்பட்டைகளில் பைகளை மாட்டிக்கொண்டு ஜாகைக்குள்ளிருந்து வெளியான தந்தையைப் பின் தொடர்ந்தான் செரோக்கி!

(தொடரும்)

செம்மைத்துளியான்


 



Post a Comment

0 Comments