குறள் 164.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
பொறமை கொணம் இருந்துச்சுன்னா, அதுனால தும்பம் வரும்னு தெரிஞ்சு வச்சிருக்க அறிவாளிங்க, பொறாமப் பட்டு என்னைக்கும் கெட்ட வேலையை செய்ய மாட்டாங்க.
குறள் 165.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
பொறாமைக் கொணம் இருக்கவொளுக்கு, அவொளை ஓய்க்கிறதுக்கு வேற பகையே வேண்டாம். அந்த கொணமே அவங்களை ஓய்ச்சிறும்.
குறள் 167.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
அடுத்தவன் நல்ல இருக்கதைப் பாத்து பொறாமைப் படுதவொனுவளை வறுமையில தள்ளி விட்டுட்டு, செல்வம் அவனை விட்டு பொயிரும்.
குறள் 168.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
பொறாமைங்கிற பாவி எவங்கிட்டல்லாம் இருக்கோ, அவங்கிட்ட இருக்க செல்வம் அவனை விட்டு போயி அவனை கெட்ட வழியிலயும் தள்ளி விட்றும்.
குறள் 169.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
பொறாமைப் படுதவனுவொ நல்லபடி வாழ்றதும், பொறாமைக் கொணம் இல்லாதவனுவொ வேதனையோட வாழ்றதும், எப்படிங்கிறது தான் எப்படின்னு புரியல.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments