Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -38


குறள் 1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் 
காணப் படாஅதி வாழி மதி.

நிலவே! 
என்னோட பிரியாம இருந்த 
என்உயிர்த்தோழி நதியா 
பிரிஞ்சு 
வேறபள்ளிக்கூடத்துக்கு போயிட்டா! 
வேற பகுதிக்கு 
வீட்டை மாத்திப்போயிட்டா! 
இப்ப வீட்லதான் இருப்பா! 
அவள தேடிக்கண்டுபிடிக்க 
நீ துணையா இருக்கணும்! 
மறையாம இரேன்.

குறள் 1211
காதலர் தூதொடு வந்த 
கனவினுக்கு யாது
செய் வேன்கொல் விருந்து. 

அம்மா அம்மா! 
நேத்து என்கனவுல 
என் தோழி சுதா வந்தா! 
அவ வெளிநாடுபோயி 
ஒரு மாசமாச்சு! 
கனவைத்தூதா அனுப்பி 
இருக்காம்மா! 
அன்பை ஏந்திவந்த 
கனவுக்கு என்ன 
விருந்துவச்சு பாராட்டலாம்? 
சொல்லும்மா!
அம்மா
குழந்தையைப் பார்த்துச் 
சிரித்தாள்!

குறள் 1212
கயலுண்கண் யானிரப்பத் 
துஞ்சிற் கலந்தார்க்கு 
உயலுண்மை சாற்றுவேன் மன்.

அம்மா! 
இந்த தாத்தா 
எப்பம்மா வருவாரு! 
இன்னும் ரெண்டுநாள்ல 
வந்துரு வாரும்மா!
அடபோம்மா! 
எனக்கு தூக்கமே 
வரமாட்டேங்குது. 
ஒருவேள நான் கெஞ்சுறதுக்காக 
என்கண்கள் தூங்கினா 
கனவுல வருவாருல்ல 
அப்ப சொல்லுவேன் 
நான்இன்னும் 
உயிரோடதான் 
இருக்கேன் தாத்தானு.

(தொடரும்)


 



Post a Comment

0 Comments