ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் SBI வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையம் அதன் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கால அவகாசம் கேட்டது SBI. ஆனால் உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்து உடனே விவரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. பின்னர் SBI வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது.
இந்நிலையில் நேற்று மாலை தேர்தல் பத்திர விவரங்களை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க ரூ.6060 கோடி நன்கொடை பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
1. பியூட்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் - ரூ.1368 கோடி. இந்நிறுவனத்தின் உரிமையாளர் லாட்டரி அதிபர் மார்ட்டின் ஆகும். இந்த நிறுவனத்தின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2.Shirdi Sai Electricals நிறுவனம் ரூ.40 கோடி. இந்த நிறுவனத்தின் மீது 2023 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அதேபோல், Future Gaming & Hotels நிறுவனம் ரூ.1200 கோடி. இந்நிறுவனத்தின்மீது ED சோதனை நடந்துள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டு ரூ.100 கோடி, ரூ.65 கோடி வழங்கியுள்ளது.
3. தமிழ்நாட்டில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக வேதாந்தா நிறுவனம் - ரூ.400 கோடி. இந்த நிறுவனத்திற்கு ஒன்றிய பா.ஜ.க அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4.மேகா இன்ஜினியரிங் அண்டு இன்ஃப்ராஸ்ட்ரச்சர்ஸ் லிட் நிறுவனம் - ரூ.966 கோடி. இந்நிறுவனத்திற்கு 2023 ஆம் ஆண்டு ரூ.14,400 கோடியில் தானே - போரிவலி இரட்டை சுரங்கப்பாதை திட்டப் பணிகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது ஒன்றிய அரசு. அதேபோல் புல்லட் ரயில் ஒப்பந்தமும் பெற்றுள்ளனர்.
5. கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஏப்ரல் 18-ஆம் தேதி கராச்சியில் உள்ள, “HUB Power company”என்ற பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து, தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க நன்கொடை பெற்றது அம்பலமாகியுள்ளது.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments