Ticker

6/recent/ticker-posts

தாய்லாந்தில் 8 கண்கள் 8 கால்கள் கொண்ட தேள் கண்டுப்பிடிப்பு


நாம் வாழும் இந்த பூமியில் பல்வேறு வகையான விலங்குகளும், தாவரங்களும் வாழ்கின்றன. இவற்றில் பலவற்றை நாம் அறிவோம், ஆனால் இன்னும் நமக்குத் தெரியாத பல உயிரினங்களும் உள்ளன. அவற்றை தேடி ஆராய்ந்து கண்டுபிடிக்க பல ஆய்வாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் தாய்லாந்தின் ஃபெட்சாபுரி (Phetchaburi) மாகாணத்தில் உள்ள கேங் கிராச்சன் தேசிய பூங்காவில் (Kaeng Krachan National Park) ஒரு புதிய வகை தேள்களை ஆய்வாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய தேள் இனம் யூஸ்கோபியோப்ஸ் (Euscopiops) என்ற துணைப்பிரிவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் தேசிய பூங்காவிற்கு Euscorpiops Krachan என்று பெயரிடப்பட்டது தற்போது வைரலாகியுள்ளது.

தாய்லாந்தில் உள்ள கேங் கிராச்சன் தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது, பாறைகளுக்கு அடியில் மறைந்திருந்த முடியுடன் கூடிய பழுப்பு நிற உயிரினங்கள் சில இருப்பதை கண்டனர். எனினும் உயிரினங்களின் நிறம் பாறையின் நிறத்துடன் ஒத்திருந்ததால் அவற்றை முதல் பார்வையில் அவற்றை வேறுபடுத்தி பார்ப்பதே மிக கடினமாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் பார்த்த புதிய உயிரினம் ஏதோ இரையைத் தேடுவதாக முதலில் நினைத்ததாகவும், இருப்பினும், அருகில் சென்று பார்த்தபோது, அந்த உயிரினத்தின் 4 குழந்தைகளும் அதை ஒட்டியிருந்ததையும் பார்த்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அந்த குட்டி உயிரினங்களில் சில பெரிய உயிரினத்தின் முதுகிலும், சில அதன் காலடியிலும் இருந்தன. தவிர அந்த உயிரினத்திற்கு 8 கால்களும் 8 கண்களும் இருந்ததை கண்டு தாங்கள் மிகவும் ஆச்சரியமடைந்ததாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஒருசில ஆய்வுகளுக்கு பிறகு தாங்கள் பார்த்த அந்த புதிய வகை உயிரினம் ஒரு புதிய வகை தேள் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து இந்த புதிய வகை தேளுக்கு கேங் கிரச்சன் ஸ்கார்பியன் என்று பெயரிட்டனர். இந்த புதிய தேளினம் 1 இன்ச் நீளம் மற்றும் அவற்றின் தோலில் முடி காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த புதிய தேள் வகையில் உச்சமாக இவற்றுக்கு மொத்தம் எட்டு கண்கள் மற்றும் எட்டு கால்கள் இருப்பது விஞ்ஞானிகள் மற்றும் வனவிலங்கு நிபுணர்களை அதிர்ச்சி மற்றும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த விவரங்கள் அதன் உடலின் வடிவத்துடன் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது, தவிர இந்த தேள் வகையின் DNA பகுப்பாய்வு குறித்த தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஸ்கார்பியோப்ஸ் இனத்தைச் சேர்ந்த மற்ற தேள்கள் பாறைகளுக்கு அடியில் பதுங்கி இருந்து வேட்டையாடுபவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


 



Post a Comment

0 Comments