Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தேர்தலின்போது ஜே.வி.பிக்கு எதிரான பிரச்சாரத்தை தயார் செய்ய முயன்ற ரணிலின் திட்டம் அம்பலம்…


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வகுத்த திட்டம் அம்பலமாகியுள்ளது.

இரத்தினபுரியில்  (04) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டின் போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இதனை மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

அதன்படி, 1983ம் ஆண்டு வன்முறைகள் 1988-89 ஆண்டு வன்முறைகள் மற்றும் 2022 மே 9 ம் திகதி சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஜேவிபியை இலக்குவைக்கவேண்டும் என விளம்பர நிறுவனத்திடம் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால், ரணில் சென்ற அந்த விளம்பர நிறுவனத்தார் தங்களுடைய அணியைச் சேர்ந்தவர் என அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அதிகாரத்தை கைப்பற்ற ரணில் விக்ரமசிங்க இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

lankatruth


 



Post a Comment

0 Comments