Ticker

6/recent/ticker-posts

காசாவில் தற்காலிக துறைமுகம் அமைக்கிறது அமெரிக்கா

வாஷிங்டன்: 
காசாவுக்குள் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல தற்காலிக துறைமுகத்தை அமைக்க ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற கூட்டுக் கூட்ட உரையில் பைடன் பேசுகையில், ஹமாஸுடனான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கிறது.

ஆனாலும், காசா பகுதியில் மனிதாபிமானப் பணிகள் விவகாரத்தை வைத்து பேரம் பேசுவது தவறு என்பதை இஸ்ரேல் தலைமைக்கு தெரிவிக்கிறேன்.

அத்தியாயவசியப் பொருள்கள் பற்றாக்குறையால் கடுமையாகத் தவித்து வரும் காசா மக்களுக்காக கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் அமைக்குமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இறைவனிடம் அந்நாட்டு அதிபர் நெதன்யாகு பதிலளிக்க வேண்டும் என்றும் பைடன் தெரிவித்தார்.

nambikkai


 



Post a Comment

0 Comments