Ticker

6/recent/ticker-posts

துணையை இழந்த துக்கம் - சாலையில் திக்குத் தெரியாமல் ஓடிய நெருப்புக்கோழி


தென்கொரியாவின் சியோங்நாம் (Seongnam) நகரச்  சாலைகளில் வித்தியாசமான காட்சி.

சாலையில் வாகனங்களுடன் சேர்ந்து ஒரு நெருப்புக் கோழியும் ஓடியது.

வாகனங்கள் அனைத்தும் நெரிசலில் சிக்கியிருந்தன.

உலகின் ஆக வேகமான பறவையான நெருப்புக்கோழி வாகனங்களைத் தாண்டி ஓடியது.

வாகன ஓட்டுநர்கள் பலர் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பறவையைப் பிடிக்க ஒரு மணிநேரம் எடுத்ததாக அதிகாரிகள் கூறினர்.

அது கார் நிறுத்தும் இடத்தைச் சென்றடைந்தபோது அதிகாரிகள் ஒரு பெரிய வலையைப் போட்டனர்.

நெருப்புக்கோழியின் ஓட்டத்தை அப்போதுதான் நிறுத்தமுடிந்தது.

அது தலைநகர் சோலுக்கு அருகே உள்ள Bug City எனும் விலங்குத் தோட்டத்திலிருந்து தப்பித்ததாகத் தெரியவந்தது.

பறவை மீண்டும் விலங்குத் தோட்டத்துக்கு அனுப்பப்பட்டது.

விலங்குத் தோட்டத்தில் அதனுடன் பழகிய ஒரு பெண் நெருப்புக்கோழி ஒரு மாதத்துக்கு முன் மாண்டது.

தோழியை இழந்த துக்கத்திலிருந்து மீண்டு வரமுடியாமல் ஆண் நெருப்புக்கோழி, மனம் குழம்பியிருக்கலாம் என்று விலங்குத் தோட்டத்தின் உரிமையாளர் சொன்னார்.


seithi


 



Post a Comment

0 Comments