நோன்பை முடிக்கும்போது பாலும் பேரீச்சம் பழமும் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
ரமலான் நோன்பு காலகட்டத்தில் உங்களின் உணவுப்பழக்கம் மாற்றமடையும் என்பதால் செரிமான அமைப்பிலும் மாற்றம் வரும். இதனால் மலச்சிக்கல் கூட ஏற்படலாம். எனவே, நார்ச்சத்து அதிகம் இருக்கும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் செரிமானமும் சீராகும், மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது.
பாலில் உள்ள புரதமும், பேரீச்சம் பழத்தில் உள்ள இயற்கையான இனிப்பும இணைந்து நோன்புக்கு பின்னர் உங்களின் தசை மீட்சிக்கு உதவும்.
பேரீச்சம் பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைய உள்ளன. எனவே இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலு பெற செய்யும்.
பேரீச்சம் பழத்தில் உள்ள இயற்கையான இனிப்புகள் உங்களுக்கு உடனடி ஆற்றலை வழங்கும்.
பேரீச்சம் பழத்தில் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான பொட்டாசியம், மேக்னீஸியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமிண் A மற்றும் K ஆகியவை உள்ளது.
பால் குடிப்பதன் மூலம் உங்களின் உடல் நீரேற்றமாக இருக்கும். பேரீச்சம் பழத்தையும் சேர்த்து உண்ணும்போது, உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டின் அளவு சமநிலை பெறும்.
நோன்பை முடித்து நீங்கள் பசியோடு சாப்பிடும்போது பேரீச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்தும், பாலில் உள்ள புரதமும், கொழுப்பும் உங்களுக்கு வயிறு நிரம்பிய திருப்தியை அளிக்கும்.
zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments