நமது நாட்டின் அரசியல் எங்கெங்கெல்லாம் புகுந்து தன் கை வரிசையை காட்ட முடியுமோ அங்கெல்லாம் புகுந்து கைவரிசை காட்டுவது தான் இலங்கையின் அரசியலாகும்.
இது தற்பொழுது முஸ்லிம்களின் கத்னா விஷயத்தை சில முஸ்லிம் மீடியாக்கள் முற்படுத்தி அதை அரசியலாக்கி பிரச்சாரங்களை மேற்கொள்ள முற்படுகின்றது.
குறிப்பிட்ட அரசியல் கட்சி 2019 ஆம் ஆண்டு அவர்களது அரசியல விஞ்ஞாபனத்தில் எழுதப்பட்ட பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் வதைக்கு உட்படுத்தப்படுதல் சம்பந்தமாக எழுதப்பட்ட ஒரு விடயத்தை பெண்கள் விருதோஷணமாக திரிபு படுத்தி பக்க சார்பாக சில அரசியல் குழுக்களுக்கு அரசியல் லாபம் பெற்றுக்கொடுக்க சில முஸ்லிம் மீடியாக்கள் முற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இதற்கு முன் முஸ்லிம் சமூகத்தை வைத்தே அரசியல் செய்யப்பட்டது.
இது போன்ற ஒரு செயலை மீண்டும் முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பிட்டு சிலர் சிலருக்கு அரசியல் லாபம் பெற்றுக் கொடுக்க முற்படுவதில் இருந்து நாம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் மார்க்கத்தையும் கலாச்சாரத்தையும் வைத்து வங்கரோத்து அரசியல் செய்யும் இக் குழுக்கள் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட அரசியல் கட்சி இது சம்பந்தமாக திறந்தவெளியில் விருதோஷணம் சம்பந்தமாக எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் சில மீடியாக்கள் இவ்வாறான ஒரு சர்ச்சையை ஏன் மைதானத்திற்கு கொண்டு வந்தது என்பதை நாம் அறிந்து கொண்டால், இவ்விதமான ஒரு கருத்து ஏன் வெளிவந்தது என்ற ராசியத்தை நாம் கிரகித்துக் கொள்ள முடியும்.
பெண்கள் கத்னா எனபது இஸ்லாத்திற்கு அப்பால் பட்ட விடயமாகும். இதற்கான எந்த உறுதியான ஆதாரங்களும் இஸ்லாத்தில் இல்லை.
இருந்தாலும் பெண்கள் விருதோஷணம் என்பது இஸ்லாத்துடன் சம்பந்தப்பட்டதா இல்லையா என்பது இரண்டாவது விடயம்.
இந்நிலையில் இது சம்பந்தமாக உண்மையில் இவ்வாறு பேசப்பட்டாலும் மாற்று மத சகோதரர்களுக்கு அதை விளக்கி தெளிவு படுத்த வேண்டியவர்கள்,பெண்கள் வதை என பொதுவாக பேசப்பட்ட விடயத்தை, பெண்கள் கத்னா என வளைத்து வேறுபக்கம் மக்களை திசை திருப்பி முஸ்லிம் சமூகத்தை பயண்படுத்தி அரசியல் லாபம் தேடுவதை இது போன்றவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே முஸ்லிம் சமூகம் சந்தர்பவாத அரசிலால் பாதிக்கப்பட்டு சமூகத்தை வைத்து அரசியல் செய்யும் சில சதிகளில் சிக்கி இனவாதிகளின் இனவாதத்தை சமூகத்திற்கு காண்பித்து அரசியல்ல் செய்யும் ஒரு கூட்டம்.
இவர்களை அடையாளம் காட்டி அரசியல் செய்யும் இன்னொரு பேரினவாதக்கூட்டம்.
இதற்கு மத்தியில் இவ்வாறான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தங்களது அரசியல் லாபங்களுக்காக முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ள காத்து நிற்கும் இன்னொரு கூட்டம்.
தேர்தல் ஒன்றை நாடு எதிர்கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் இவர்களது சதிவலைகள் சிக்காமல் சமூகத்தின் எதிர்காலம் பற்றி சிந்தித்து, நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தித்து, தாம் விரும்பியவர்களுக்கு தங்களது ஜனநாயக உரிமையை சுதந்திரமாக பயன்படுத்த சிந்திக்க வேண்டும்.
பேருவலை ஹில்மி.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments